இன
இன்னார் என்று அறியேன்!’
என்று உத்தேஸ்யமான பொருளையும் மறக்கும்படி கலங்குவர். ‘பிள்ளாய், நல்லதை மறக்கப்பண்ணா நிற்க
இவ்விஷயம், தீயதை மறவாது ஒழிவதே! அவனுடைய இனிமையை அநுசந்தித்து வைத்தும், பின்னையும் இந்நிலை
குறையாதே நிற்பதே! இவ்வரிய செயலைச் செய்கைக்குத் திண்ணியர் ஆவதே இவர்கள்!’ என்று இரங்குகிறார்.
‘பிறவித் துயர்
அற ஞானத்துள் நின்று துறவிச் சுடர் விளக்கந் தலைப்பெய்வார், மறவியை இன்றி, அறவனை ஆழிப்படை
அந்தணனை மனத்து வைப்பாரே,’ என்று சொற்களைக் கூட்டி முடிக்க.
இனி, இத்திருப்பாசுரத்திற்கு
1உபாசக பரமாகவும் பொருள் அருளிச்செய்வர். அப்பொழுது ‘சுடர் விளக்கம்’ என்பதற்கு,
நற்குணங்கள் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கின்ற இறைவனுடைய திருமேனி என்று பொருள் கொள்க.
சுடர் - குணங்கள். விளக்கம் - திருமேனி.
(1)
68
வைப்பாம் மருந்தாம்
அடியரை வல்வினைத்
துப்பாம் புலன்ஐந்தும்
துஞ்சக் கொடான்அவன்
எப்பால் எவர்க்கும்
நலத்தால் உயர்ந்துஉயர்ந்து
அப்பா லவன்எங்கள்
ஆயர் கொழுந்தே.
பொ-ரை :
எந்தப் பகுதிகளிலுள்ள எத்தன்மையான உயர்ச்சியினையுடையவர்கட்கும்
ஆனந்தத்தால் மேன்மேல் உயர்ந்து அப்பாற்பட்டவனும், எங்கள் ஆயர் குலத்திற்குக் கொழுந்து
போன்றவனும், கொடிய வினைகளைச் செய்யத் தூண்டுகிற வலிமை பொருந்திய ஐந்து இந்திரியங்களாலும்
அடியார்கள் வருந்தும்படி அவர்களை விடாதவனும் ஆன அவ்விறைவன், அடியார்கட்குச் சேமநிதியாவன்;
தன்னை அடைவதற்குத் தடையாக உள்ள வினைகளை நீக்கும் மருந்தும் ஆவன்.
வி-கு :
‘அடியாரை’ என்பதனை முன்னும் பின்னும் கூட்டிப்
பொருள் கொள்க. ‘யாவர்க்கும்’ என்பதும் பாடம். ‘எங்கள்’ என்பதனைக் கொழுந்திற்கு
அடைமொழியாக்கினும் அமையும்.
1. உபாசகர் - பத்திமான்கள். உபாசக பரமாக அருளிச்செய்யும் பொருள் :
இவ்வுலகத்தில் உண்டாகிற
எல்லாத் துன்பங்களும் போகும் படியாகப்
பகவத் ஞானத்திலே நின்று பிரகிருதி சப்பந்தமற்று, குணப்
பிரகாசகமான
பகவத் விக்கிரகத்தை அனுபவிக்க வேண்டியிருப்பவர்கள், உபாசன
தர்மத்திற்கு உரியவனாய்,
அஞ்ஞான இருளை நீக்குகின்ற
திருவாழியினையுடையனாய், மிகத் தூயனான சர்வேஸ்வரனைப் பிரிவு
இன்றி
நிரந்தர பாவநா முகத்தாலே நெஞ்சிலே வைப்பார் என்பதாம்.
|