ப
பிரிவு வருமோ என்ற
ஐயமும் இல்லாதவர்களாய், தாங்கள் பலராய் இருக்கின்ற நித்தியசூரிகட்குத் தாரகம் முதலானவைகள்
எல்லாம் தானேயாய் இருக்கின்றவன். இதனால், தான் அருளாத அன்று, தங்கள் ஆன்மாவைக்கொண்டு
ஆற்றமாட்டாதாரை ஒரு நாடாகவுடையவன் என்கிறார். என் இசைவினை - ‘நான் அல்லேன்’ என்று அகலாதபடி
1என் இசைவு தானாய்ப் புகுந்தவனை. என் சொல்லி யான் விடுவேன் - 2‘சிறிது
மயர்வு கிடந்தது’ என்று விடவோ? ‘மயர்வைப் போக்கித் தான் கடக்க இருந்தான்’ என்று விடவோ?
‘எனக்கு மேன்மேலென நன்மைகளைப் பண்ணித் தந்திலன்’ என்று விடவோ? ‘தான் செய்த உபகாரத்துக்குக்
கைம்மாறு கொள்ள இருந்தான்’ என்று விடவோ? ‘வடிவழகு இல்லை’ என்று விடவோ? ‘மேன்மை போராது’
என்று விடவோ? ‘இப்பேற்றுக்கு முயற்சி செய்தேன் நான்’ என்று விடவோ? எதனைச் சொல்லி நான்
விடுவேன்?’ என்கிறார்.
(4)
71
விடுவே னோஎன்
விளக்கைஎன் ஆவியை
நடுவே வந்துஉய்யக்
கொள்கின்ற நாதனைத்
தொடுவே செய்துஇள
ஆய்ச்சியர் கண்ணினுள்
விடவே செய்து
விழிக்கும் பிரானையே.
பொ-ரை : ‘எனக்கு விளக்காய் இருக்கின்றவனை, எனது உயிரை,
இடையிலே வந்து உய்யக்கொண்ட தலைவனை, ஆராய்ச்சி உண்டாக்கத் தக்க செயல்களைச் செய்து
அதனைக் காண அங்கு வந்து சேர்ந்த இளம்பருவம் வாய்ந்த ஆயர் மகளிருடைய கண்களில் தூது விடுதலைச்
செய்து, அதனால் கண்களோடு கண்கள் கலக்கும்படி பார்க்கின்ற உபகாரங்களை நான் விடுவனோ?’ என்கிறார்.
வி-கு :
இப்பாசுரம், பூட்டுவிற்பொருள்கோள். தொடுவு - களவு.
தொடுவே - ஏகாரம் பிரிநிலை. சிலர் தாமாகவே வந்து வெண்ணெயைக் கொடுக்கினும் கொள்ளாமையைப்
பிரிக்கின்றது.
1. என் இசைவு தானாய்ப் புகுந்தவனை - என் இசைவுக்கு அந்த ராத்துமாவாய்
நின்று நியமித்துக்கொண்டிருக்கின்றவனை.
2. திருப்பதிகத்திலுள்ள ‘மயர்வற’, ‘மன்னினான்’, ‘உயர்வினையே தரும்’,
‘ஒண்சுடர்க் கற்றையை’,
‘அமரர்கள் ஆதிக்கொழுந்தை’, ‘என் இசைவினை’
என்ற தொடர் மொழிகளில் நோக்காக, இங்குச்
‘சிறிது மயர்வு கிடந்தது
என்று விடவோ?’ என்பது முதலானவற்றை அருளிச் செய்கிறார். இவற்றை
நிரலே
கொள்க. அங்ஙனம் கொள்ளுமிடத்து, ‘ஒண்சுடர்க் கற்றையை’
என்பதற்கு அருளிச்செய்த இரண்டாவது
பொருளை, ‘வடிவழகு இல்லை
என்று விடவோ?’ என்பதற்குக் கொள்க.
|