ஈ
ஈடு :
ஐந்தாம் பாட்டு. ‘திருவாய்ப்பாடியில் பெண்கள்
கிருஷ்ணனை விட்டுப் பரமபதத்தை விரும்பும் அன்று அன்றோ நான் இறைவனை விட்டுப் புறம்பே போவேன்?’
என்கிறார்.
என் விளக்கை -
அறிவின்மையாகிற இருள் போகும்படி என்னிடத்து ஒரு விதக் காரணமும் இன்றி, தன்னுடைய சொரூபம்
உருவம் குணம் உலகம் முதலான விபூதிகளை எனக்கு விளங்கச் செய்தவனை. விளக்காவது, தன்னையுங் காட்டிப்
பொருள்களையுங் காட்டுவது ஒன்று அன்றோ? அது போன்று, இறைவனும் இவர்க்குத் தன்னையும் காட்டி,
ஆத்தும சொரூபத்தையும் விரோதி சொரூபத்தையும் காட்டித் தந்தானாதலின், ‘விளக்கு’ என்கிறார்.
‘என் விளக்கை என்பான் என்? அல்லாதார்க்கும் ஒவ்வாதோ?’ என்னில் 1இவரைப்
போன்று மற்றையோர்க்குப் பத்தி இல்லையே? பத்தி உண்டாகில் அன்றோ இவ்விளக்குப் பிரகாசிப்பது?
ஆதலால், ‘என் விளக்கை’ என்கிறார். என் ஆவியை-தான் ஒருவன் உளன் என்னும் அறிவாதல்,
தன் பக்கல் பத்தியாதல் இன்றிக்கே, சரீரத்தின் வசப்பட்டவனாய் உரு மாய்ந்து போந்த என்
ஆத்துமாவை. நடுவே வந்து உலகத்துப் பொருள்களிலே ஆசையுள்ளவனாய்ப் போகாநிற்க நடுவே வந்து மீட்டான்
இத்தனை; நிர்ஹேதுகமாக வந்தான் என்றபடி. உய்யக் கொள்கின்ற - 2‘கடவுளை உள்ளபடி
அறிதல் என்பது இல்லையானால் அவன் இல்லாதவன் ஆகிறான்,’ என்கிறபடியே, இல்லாதவனுக்குச் சமானனான
என்னை, 3கடவுளை உள்ளபடி அறிதல் என்பது உண்டானால் அவன் உள்ளவன் ஆகிறான்’ என்ற
நிலையிலே ஆகும்படி செய்தான். உய்யக்கொண்டு விட்டிலன்; மேல் மேல் எனக் கொள்ளாநின்றான்
ஆதலின், ‘உய்யக் கொள்கின்ற’ என்கிறார்.
‘‘என் ஆவி’ என்று
உம்மதாகச் சொன்னீர்; உம்முடைய ஆத்துமாவை அவன் வந்து உய்யக் கொள்ளக் காரணம் என்?’ என்ன,
நாதனை - 'யாருடைய பொருள் அழியப் புக்கது? ‘நான்’ என்று ஒருவன் உளனோ? உடையவன் ஆகையாலே செய்தான்’
என்கிறார். ‘நன்று; ஒருவர் பெறும் பேற்றுக்கு மற்று ஒருவர்
1. அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புஉருகு சிந்தை
இடுதிரியா - நன்புஉருகி
ஞானச்
சுடர்விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த
நான்.
என்ற திருப்பாசுரம் இங்கு
நினைத்தல் தகும்
2,
3.
தைத்திரீய. ஆனந். 6.
|