New Page 1
முயல்வரோ?’ எனின்,
‘திருவாய்ப்பாடியில் பெண்களுடைய பேற்றுக்கு முயற்சி செய்தவர் யார்?’ என்கிறார். தொடுவே செய்து-ஆராய்ச்சிப்படும்
செயல்களைச் செய்து. ஆராய்ச்சிப்படும் செயல்கள். கேள்வி பிறக்கும் செயல்கள்; அவையாவன:
ஓரிடத்திலே சென்று களவு கண்டு அகப்படுதல், ‘கள்ளனைக் காண வேண்டும்’ என்று இருப்பவர்கள்
வருதல், இவனாலே புண்பட்டவர் அனைவரும் வருதல் முதலியன. இள ஆய்ச்சியர் கண்ணினுள் - பருவம் நிரம்பின
ஆயர் பெண்கள் கண்களுக்குள்ளே. ‘ஆய்ச்சியர்’ என்றதனால், ஆடவர்களையும், ‘இள’
என்றதனால், பருவம் முதிர்ந்த பெண்களையும் விலக்கியவாறு. 1இவர்களுக்கு ஒரு பயம்
இல்லை, அருகே நின்றார்க்குத் தெரியாதபடி செய்தான் ஆதலின், ‘கண்ணினுள்’ என்கிறார்.
விடவே செய்து விழிக்கும்-அவர்கள் தூது விடும்படியைச் செய்து விழிக்கின்ற. இனி, இதற்குத்
2‘தூது செய் கண்கள்’ என்கிறபடியே, ‘தான் தூது விடுகையாகிற செயலைச் செய்து
விழிக்கின்ற’ என்று கூறலுமாம். இனி, 3‘விடருடைய செயல்களைச் செய்து’ என்று
பொருள் கூறலும் ஓன்று. பிரானை - அந்நோக்கால் ஆயர் பெண்களைத் தனக்கே உரிமையாக்கிக்கொண்டது
போன்று, என்னையும் தனக்கே உரிமை ஆக்கிக்கொண்டவனை விடுவேனோ?
(5)
72
பிராஅன் பெருநிலம்
கீண்டவன் பின்னும்
விராஅய் மலர்த்துழாய்
வேய்ந்த முடியன்
மராமரம் எய்த
மாயவன் என்னுள்
இரான்எனில்
பின்னை யான்ஒட்டு வேனோ?
பொ-ரை : ‘பிரளயவெள்ளத்திற்புக்கு உலகத்தைக் கோட்டாற்குத்தி
எடுத்து வந்தவனும், உபசாரகனும், அதற்குமேல், மலர்கள் கலந்த திருத்துழாய் மாலையினை அணிந்த
முடியையுடையவனும், மராமரங்கள் ஏழனையும் எய்த ஆச்சரியமான செயலையுடையவனும் ஆன எம்பெருமான் என்
மனத்தில் ‘இரேன்’ என்பானாயின், அவன் என்னை விட்டுப் பிரிந்து செல்வதற்கு யான் உடன்படுவேனோ!’
என்கிறார்.
வி-கு :
‘புருவத்துக் கருவல் கந்தத்தால், தாங்கி இவ்வுலகம்
தந்து அடிப்படுத்ததை நடுவண், ஓங்கிய பலர்புகழ் குன்றினோடு ஒக்கும்,
1.
‘இவர்களுக்குப் பயமில்லை’ என்றது, கிருஷ்ணனைப் பிரிந்ததால்
உண்டாகும் பயமில்லை; அதாவது,
ஈடுபாடு இல்லை என்றபடி.
2. திருவாய். 9. 9 : 9.
3.
விடர் - தீயொழுக்கமுடைய காமுகர்.
|