பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
320

ஒன

ஒன்பதாந்திருவாய்மொழி - ‘இவையும் அவையும்’

முன்னுரை

    மேல் திருவாய்மொழியில் இறைவனுடைய ஆர்ஜவ குணத்தை அநுசந்தானம் செய்தார்; இப்படி அநுசந்தித்தார் திறத்தில் சர்வேஸ்வரன் இருக்கும்படியை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில், 1சர்வேஸ்வரனாய்த் திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய் இருக்கிற இறைவன், ஆழ்வார் பத்தியிலே துவக்குண்டு இவரோடே கலந்து இனிமையில் ஒன்று ஆனான்; ஆழ்வாரானவர் மேற்கூறிய ஆர்ஜவ குண அநுசந்தானத்தால் இறைவன் பக்கல் பெரிய விடாயை உடையவர் ஆனார்; இறைவன், ‘இது நமக்கு நல்ல வாய்ப்பாய் இருந்தது’ என்று பார்த்து, அருச்சுனன், ‘விபூதி 2சிரவணத்தாலே விபூதிமான் ஆனவனைக் காணவேண்டும்’ என்று விரும்ப, ‘அதற்கு உறுப்பாக 3உனக்கு ஞானக் கண்களைக் கொடுக்கிறேன்’ என்கிறபடியே, திவ்வியமான கண்களைக் கொடுத்து, உலகமே உருவமாக இருக்கும் தனது தன்மையைக் காட்டியது போன்று, இவ்வாழ்வார்க்கும் தன்னை அனுபவிக்கைக்கு ஈடான 4விடாயைப் பிறப்பித்துப் பரம பதத்தில் உள்ளாரோடு பரிமாறுவது போன்று பரிமாறக்கோலித் தன்னை அனுபவிப்பிக்கிறான். அதாவது, பிராட்டிமாரோடு பரிமாறுவது, தேவியர் என்னும் முறையாலே; திருவடியோடு பரிமாறுவது, வாகனம் என்னும் முறையாலே; திருவனந்தாழ்வானோடு பரிமாறுவது, படுக்கை என்னும் முறையாலே. இப்படி5 அவர்களோடு ஒவ்வொரு முறையாலே பரிமாறும் பரிமாற்றங்கள் எல்லாம் இவர்

 

1. இத்திருபதிகத்தில் வருகின்ற முதல் பாசுரத்தினை நோக்கி,
  ‘சர்வேஸ்வரனாய்த் திருமகள் கேள்வனாய்ப் பரம ரசிகனாய்’ என்கிறார்.
  ‘தனிமுதல் எம்மான்,’ ‘என் அமுதம் சுவையன்,’ ‘திருவின் மணாளன்’
  என்பவற்றை நோக்குக.

2. விபூதி சிரவணம் - உலகம் முதலான செல்வங்களின் தன்மையைக்கேட்டல்.
  விபூதிமான் - உலகமே உருவமான இறைவன்.

3. ஸ்ரீ கீதை. 11 : 8.

4. விடாயைப் பிறப்பித்து - பத்தி ரூபாபந்ந ஞானத்தை விளங்கச் செய்து.

5. இத்திருப்பதிகத்தில், மூன்றாம் பாசுரத்தின் ‘ஒரு கதியின் சுவை தந்திட்டு’
  என்ற பகுதியின் வியாக்கியானத்தை ஈண்டு நோக்குக.