|
New Page 1
‘வல்லான்’
என்கிறார். அவற்றுள், ஒரு சூழல் சொல்லுகிறார் மேல்: தொல்லை அம் காலத்து உலகைக் கேழல்
ஒன்றாகி இடந்த கேசவன்-வராக கல்பத்தின் ஆதியிலே ஆதலில் ‘தொல்லை’ என்கிறார்.
தன் வடிவைக் கண்ணுக்கு இலக்கு ஆக்கின காலமாதலின், ‘அம் காலம்’ என்கிறார். ‘ஒரு திருவடி,
திருவனந்தாழ்வானுக்காகத் தான் இங்ஙனம் செய்தானோ! 1சங்கல்பத்துக்கும் பாத்தம்
போராத பூமிக்காகச் செய்தான்,’ என்பார், ‘உலகை’ என்கிறார்; தன் மேன்மையோடு
அணைந்து இருப்பது ஒரு வடிவைத் தான் கொண்டானோ!’ என்பார், ‘கேழல்’ என்கிறார்.
பின்னர், சர்வசத்தியான தானே ‘இவ்வடிவைக் கொள்ளவேண்டும்’ என்னிலும் ஒண்ணாதபடி இரண்டு அற்றதாய்
இருந்தது ஆதலின், ‘ஒன்றாகி’ என்கிறார். அதாவது, பூமி பிரளயத்தில் அகப்பட்டவாறே,
நீருக்கும் சேற்றுக்கும் பின் வாங்காத வடிவைக் கொண்டான்; அது அவன் கொண்ட வடிவாகையாலே அழிவுக்கு
இட்ட வடிவு தனக்கே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்கின்றது என்றபடி. 2‘பன்றியாம்
தேசு’ என்பர் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார். பன்றியின் சாதிக்கு உள்ளது ஒரு குணமாயிற்றுச்
செருக்கு. திருமகள் கேள்வன் அவ்வடிவைக் கொண்டால் செருக்குச் சொல்ல வேண்டாவே! ஆதலின்,
‘இடந்த’ என்கிறார். அதாவது, ‘அண்டப்பித்தியிலே சேர்ந்த பூமியைப் புக்கு எடுத்துக்கொண்டு
ஏறினான்,’ என்பதாம். அப்போதைத் திருமேனியும் 3உளை மயிருமாய் நின்ற நிலையினை
நினைந்து. ‘கேசவன்’ என்கிறார். கேசம் - மயிர்.
என்னுடை அம்மான்
- சம்சாரப் பிரளயங்கொண்ட என்னை எடுத்தவன். வேழம் மருப்பை ஒசித்தான் - குவலயாபீடத்தினுடைய
தந்தங்களை வருத்தம் இன்றி முரித்தவன். அப்படியே, என்னுடைய 4மதகளிறுகளாகிய ஐம்பொறிகளையும்
சேரி திரியாமல் செய்தவன் என்பதனைக் குறித்தபடி. விண்ணவர்க்கு எண்ணல் அரியான் - தனியே குவலயாபீடத்தோடே
போர் செய்தவன், பிரமன் சிவன் இவர்கள் மனத்தின் எண்ணத்திற்கும் அப்பாற்பட்டவன். ஆழம்
நெடுங்கடல் சேர்ந்தான் - அந்தப் பிரமன் முதலாயினாருடைய
1. சங்கல்பத்துக்கும் பாத்தம் போராத பூமி - நுனைப்பதற்கும் தரம் போதாத
பூமி.
2. நாய்ச்சியார்
திருமொழி, 11 : 8.
3. உளை - பிடரி மயிர்.
4. 'வாரி சுருக்கி மதகளிறு ஐந்தினையும், சேரி திரியாமல் செந் நிறீ இ' (முதல்
திருவந். 47.)
|