|
New Page 1
பேற்றின் கனத்துக்கு
இதனை ஒரு சாதனமாகச் சொல்லுதற்கு இல்லையே; என் போல!’ எனில், ஒருவன் ஓர் எலுமிச்சம் பழம்
கொடுத்து இராச்சியத்தைப் பெற்றால் அதற்கு அது விலையாய் இராதே; மற்றும், சர்வேஸ்வரன் அடியாக
வரும் பேற்றுக்கு இத்தலையால் ஒரு காரணத்தை நிரூபிப்பதற்கும் இல்லையே? 1‘வரலாறு
ஒன்று இல்லையால் வாழ்வு இனிதால்’ என்னும் படியன்றே இருப்பது? மற்றும், இவனை முதலிலே படைக்கிற
போது ‘இவன் தீய வழியைத் தப்பி நல்லவழி போக வேண்டும்’ என்று உறுப்புகளைக் கொடுத்துவிடுகையாலே,
இவன் தலையால் பிறந்த நன்மைக்கும் காரணம் அவனாக இருப்பான்; இனி, புத்தி முதலான எல்லாப்
பொருள்கட்கும் நிர்வாஹகன் ஆகையாலே, வெறுப்பின்மை தொடக்கமாகப் பரிகணனை நடுவாக, பரமபத்தி
முடிவாகப் பிறப்பிப்பான் ஒருவனும் இறைவனேயாவன்; ஆதலால், ‘நித்தியசூரிகள் பேற்றை, அநாதி
காலம் உழன்று திரிந்த நமக்குத் தந்தான், அவன் திருவருள் இருக்கும்படி என்?’ என்று, மேல் திருவாய்மொழியில்
தலைமுடிவாகப் பிறந்த சேர்க்கையாலாய சுவையை நினைத்து இன்புறுகிறார் என்பது.
100
பொருமா நீள்படை
ஆழிசங் கத்தொடு
திருமா நீள்கழல்
ஏழுல கும்தொழ
ஒருமா ணிக்குற
ளாகி நிமிர்ந்தஅக்
கருமா ணிக்கம்என்
கண்ணுள தாகுமே.
பொ-ரை : பகைவர்களோடு போர் செய்கின்ற பெருமை
பொருந்திய நீண்ட ஆயுதங்களான சக்கரம் சங்கு என்னும் இவற்றோடு, செல்வத்தைத் தருகின்ற பூஜிக்கத்
தக்க நீண்ட திருவடிகளை ஏழுலகத்துள்ளாரும் தொழுது வணங்கும்படி, ஒப்பற்ற பிரமசரிய நிலையையுடைய
குட்டையனாகி, பின் வளர்ந்த அந்தக் கரிய மாணிக்கம் போன்ற இறைவன் என் கண்களில்
இருக்கின்றவன் ஆனான்.
வி-கு :
‘ஆழி சங்கத்தோடு கழலைத்தொழ ஆகி நிமிர்ந்த அக்கரு
மாணிக்கம்’ எனக் கூட்டுக. ‘நீள்படை, நீள்கழல்’ என்பன வினைத்தொகைகள். மாணி - பிரமசாரி.
மாணிக்கம் என்பது சொல்லால் அஃறிணையாதலின், உளதாகும் என அஃறிணை முடிபு கொடுத்து ஓதி
1.
பெரிய திருவந். 56.
|