|
பத
பத்தாந்திருவாய்மொழி
- ‘பொருமாநீள்’
முன்னுரை
மேல் திருவாய்மொழியில்,
தமது எல்லா அவயவங்களிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை நினைத்து இன்புறுகின்றார் என்று மேல்
திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்வர் முன்புள்ள பெரியோர்கள்.
1இங்கு, மேல் எல்லா உறுப்புகளிலும் இறைவன் சேர்ந்த சேர்க்கையை அநுசந்தித்துப்
பட்டர் அருளிச்செய்வதோர் ஏற்றம் உண்டு. அதாவது, மேல் திருவாய்மொழியில்
‘உச்சியுள்ளே நிற்கும்’ என்று அன்றே அருளிச் செய்தார்? பேற்றில் இனி, ‘இதற்கு அவ்வருகு ஏற்றமாகச்
செய்து கொடுக்கலாவது 2ஒன்றும் இன்று; இனி, இதனுடைய பிரிவின்மையைச் செய்து
கொடுக்கையே உள்ளது; பேறு கனத்து இருந்தது இது வந்த வழி என்னை?’ என்று ஆராய்ந்தார்; 3இப்பேற்றின்
கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில் இல்லாது இருந்தது; ‘ஏன இல்லையோ?’ எனின்,
இத்தலையில் ஏதேனும் உண்டாகப் பார்த்தாலும், வெறுப்பின்மை எதிர் முகமாதல் என்னும் இவையே உள்ளனவாம்;
இவற்றைத் தாம் பெற்ற பேற்றிற்கு ஒரு சாதனமாகச் சொல்லப்போகா; ‘என்னை?’ எனில், இத்தலையில்
பரமபத்தி அளவாகப் பிறந்தாலும்
1.
மேல் திருப்பதிகத்தில், ‘ஆழ்வார், தம்முடைய எல்லா அவயவங்களிலும்
இறைவன் சேர்ந்த சேர்க்கையை
நினைத்து இன்புறுகிறார்’ என்ற கருத்தில்,
முன்புள்ள பெரியோர்களுடைய திருவுள்ளத்தைப் பட்டர்
அடி
ஒற்றினாராயினும், ‘இறைவன், ஒருவிதக் காரணமும் பற்றாத திருவருளால்
தம்முடைய எல்லா அவயவங்களிலும்
சேர்ந்த சேர்க்கையை நினைத்து
இன்புறுகிறார்’ என்று பட்டர் அருளிச்செய்யும் அழகு அறிஞர் கண்டு
மகிழ்தற்குரியது. மேல் திருப்பதிகத்தில் பிறந்த ‘சர்வாங்க சம்ஸ்லேஷத்துக்கு
ஏதுவாக, இத்திருப்பதிகத்தில்
ஏதாவது ஒன்றைக் கூறியது உண்டோ?’ என்று
ஆராய்ந்து பார்த்து, காணாமையாலே பட்டர் இங்ஙனம்
அருளிச்செய்கிறார்.
2.
‘ஒன்றும் இன்று’ என்பது என்? பரமபதத்தில் கொண்டுபோய் அனுபவிக்கிறது
ஏற்றம் அன்றோ?’ என்ன,
‘அன்று’ என்கிறார் ‘இனி, இதனுடைய
பிரிவின்மையைச் செய்து கொடுக்கையே உள்ளது’ என்பதனாலே.
ஆதலால்
பேறு கனத்திருந்தது என்று கூட்டுக.
3.
‘இப்பேற்றின் கனத்துக்கு ஈடாக இருப்பது ஒரு நன்மை தம்மிடத்தில்
இல்லாதிருந்தது’ என்ற
வாக்கியத்தை, ‘அங்ஙனமிருந்தும், நித்தியசூரிகள்
பேற்றை, அநாதி காலம் உழன்று திரிந்த நமக்குத்
தந்தான்’ என மேல்
வரும் வாக்கியத்தோடே கூட்டுக.
|