பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
345

New Page 1

    முதற்பாட்டில், ‘என்னுடைய எல்லையிலே வந்து நின்றான்’ என்றார்; இரண்டாம் பாட்டில், ‘அது பொறுத்தவாறே அருகே நின்றான்’ என்றார்; மூன்றாம் பாட்டில், தம்முடன் கூட நின்றான் என்றார்; நான்காம் பாட்டில், ‘ஒக்கலையில் வந்து நின்றான்’ என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘நெஞ்சிலே வந்து புகுந்தான்’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘தோளிலே வந்திருந்தான்’ என்றார்; ஏழாம் பாட்டில் ‘நாவிலே வந்து புகுந்தான்’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘கண்ணுள்ளே நின்றான்’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘நெற்றியிலே நின்றான்’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘திருமுடியிலே நின்றான்’ என்றார்; முடிவில், பலம் சொல்லித் தலைக்கட்டினார். இனி, தம்முடனே பொறுக்கும்படி கலக்கையாலே அவனைத் தலைமேற் கொண்டார் எனலுமாம்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        இவைஅறிந்தோர் தம்மளவில் ஈசன்உவந் தாற்ற
        அவயவங்கள் தோறும் அணையும்-சுவையதனைப்
        பெற்றுஆர்வத் தால்மாறன் பேசினசொல் பேசமால்
        பொற்றாள்நம் சென்னி பொரும்

(9)

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே அரண்.