பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
367

னும

னும் ஆசை குறைவு இல்லாதவர்களாகிக் கற்பார்களேயாயின், கல்வியின் பயனான தொண்டு செய்தல் அவர்களுக்கு உளதாம்.

    வி-கு : தணிவிலர் - முற்றெச்சம். கல்வி என்பது அதன் பயனாகிய அறிவிற்காகி, அவ்வறிவு அதன் பயனாய தொண்டிற்கு ஆயிற்று; இருமடி ஆகுபெயர்.

    ஈடு : முடிவில், ‘இப்பத்தைக் கற்றவர்கள் தன்னின் மேம்பட்டது இல்லாத புருஷார்த்தமான பகவானுடைய கைங்கரியத்தைப் பெறுவர்,’ என்கிறார்.

    மணியை - முன்தானையிலே முடிந்து ஆளலாம்படி கைப்புகுந்திருப்பான் என்று அவனுடைய சௌலப்பியத்தைச் சொல்லுகிறார். ‘தென்குறுங்குடி நின்ற’ என்கிற இடத்தில் சௌலப்பியம். வானவர் கண்ணனை - இதனால், ‘உம்பர் வானவர் ஆதியம் சோதி’ என்கிற மேன்மையைச் சொல்லுகிறார். தன்னதோர் அணியை-இதனால் ‘அச்செம்பொனே திகழும் திரு மூர்த்தி’ என்கிற வடிவழகை நினைக்கிறார். இம்மூன்றுங்கூடின பசுங்கூட்டே பரத்துவம் எனப்படுதலின், இவற்றை ஈண்டு ஒருசேர அருளிச்செய்கிறார். தென்குருகூர்ச்சடகோபன் சொல்பணி செய் ஆயிரம் - ஆழ்வார் அருளிச்செய்ததாய் ‘நாம் இங்குத்தைக்குக் கிஞ்சித்கரித்தோம் ஆக வேண்டும்’ என்று, சொற்கள்தாம் ‘என்னைக்கொள், என்னைக் கொள்’ என்று 1‘மிடைந்தசொல்’ என்கிறபடியே, சொற்கள் பணி செய்த ஆயிரம் பாசுரங்கள். இனி, ‘சொல் பணி செய் ஆயிரம்’ என்பதற்கு, ‘சொற்களால் பணி செய்த ஆயிரம்; அதாவது, வாசிகமான அடிமையைச் சொல்லுகிறார்’ என்று பொருள் கோடலுமாம்.

    உடன் தணிவிலர் கற்பரேல்-அபிப்பிராயத்தோடு கற்பாராகில். தணிவு - முயற்சி அற்று இருத்தல்; அதாவது, ‘வரில் போகடேன், கெடில் தேடேன்’ என்றிருக்கை அன்றி, சிரத்தை மாறாமல் கற்பராகில் என்றபடி. கல்வி வாயும் - 2‘ஒண்தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு’ என்கிறபடியே, ஞானமாகில் பகவத்விஷயத்தைப் பற்றியல்லது இராமையாலே, இதனைக்கற்க, இதற்குப் பலமாகத்தொண்டினை இது தானே தரும். இனி, இதற்குக் (கல்விதானே பயன்’ என்று பொருள் கூறலும் ஒன்று.

(11)

 

1. திருவாய்மொழி, 1, 7 : 11.
2. முதல் திருவந்தாதி, 67.