|
இத
இத்திருவாய்மொழியில்,
மேல் பரக்க அருளிச்செய்யப் புகும் பொருள்களை எல்லாம் சுருக்கமாக முதற்பாட்டிலே அருளிச்செய்தார்;
இரண்டாம் பாட்டில் ‘பரமபத்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க முகங்காட்டும்,’ என்றார்; மூன்றாம்
பாட்டில், ‘கண்டாயே அவன் சொரூபம் இருந்தபடி; நீயும் உன் சொரூபத்துக்குத் தக்கபடி நிற்கப்பாராய்,’
என்றார்; நான்காம் பாட்டில் சொரூபத்திற்குத் தகுதியாக நெஞ்சு தொழுதவாறே நெஞ்சைக் கொண்டாடினார்;
ஐந்தாம் பாட்டில், மேல் ‘எண்ணிலும் வரும்’ என்றது, பலத்தோடே சேர்ந்து முடிவுற்றபடியை நெஞ்சுக்கு
அருளிச்செய்தார்; ஆறாம் பாட்டில், ‘நாம் இருவரும் இப்படி நிற்கப் பெறில் நமக்கு ஒரு கேடும்
வாராது,’ என்றார்; ஏழாம் பாட்டில், மேல் இவர் அஞ்சினபடியே விடிந்தபடி அருளிச்செய்தார்; எட்டாம்
பாட்டில் திருநாமத்தைக் கேட்டவாறே தம்முடைய காரணங்களுக்குப் பிறந்த வேறுபாட்டைச்
சொன்னார்; ஒன்பதாம் பாட்டில், ‘வேறுபட்டவர் ஆகாதே மறந்தாலோ?’ என்ன, ‘என் மனத்திலே
இருக்கிறவனை மறக்கப்போமோ?’ என்றார்; முடிவில், கற்றார்க்குப் பலஞ்சொல்லித் தலைக்கட்டினார்.
முதற்பதிகத்தால்,
‘எல்லாரினும் அறப்பெரியன் இறைவன்’ என்றார்; இரண்டாம் பதிகத்தால், ‘வணங்கத் தக்கவன்’
என்றார்; மூன்றாம் பதிகத்தால், ‘அவன்தான் எளியவன்,’ என்றார்; நான்காம் பதிகத்தால்,
‘எளியனானவன் குற்றங்களைப் பொறுப்பவன்,’ என்றார்; ஐந்தாம் பதிகத்தால், ‘அவன் சீலவான்,’
என்றார்; ஆறாம் பதிகத்தால், ‘எளிதாக ஆராதிக்கத் தக்கவன்,’ என்றார்; ஏழாம் பதிகத்தால்,
‘எல்லை இல்லாத இனியன்,’ என்றார்; எட்டாம் பதிகத்தால், அவனுடைய ஆர்ஜவ குணத்தை அருளிச்செய்தார்;
ஒன்பதாம் பதிகத்தால், பொறுக்கப் பொறுக்க இன்பத்தினைக் கொடுப்பவன் என்றார்; பத்தாம்
பதிகத்தால், ‘இத்தன்மைகளையுடையவன் ஒருவன் இறைவன் ஆதலின், ஒருவிதக்காரணமும் இன்றியே உயிர்களை
அங்கீகரிப்பவன்,’ என்றார்; ஆகையாலே, ‘அவன் துயரறு சுடரடி தொழுது எழு என்மனனே’ என்று தம் திருவுள்ளத்தைக்
குறித்து அருளிச்செய்து தலைக்கட்டினார்.
ஆக, ‘அடி தொழுது
எழு’ என்று தொடங்கி, ‘கல்வி வாயும்’ என்று முடித்ததனால், ஒரு மனிதன் விரும்பிப் பெறத் தக்க
உயர்வு அற உயர்ந்த உறுதிப்பொருள், பகவானுக்குச்
|