பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
403

வார்கள் ஆனார்கள். இவர்களுள் பொய்கையார் காஞ்சியிலும், பூதத்தார் திருக்கடன்மல்லையிலும், பேயார் மைலாப்பூரிலும் அயோனிஜர்களாய் ஓரே மாதத்தில் அடுத்தடுத்த நக்ஷத்திரங்களில் அவதரித்தவர்கள். இவர்கள் காலம், கி. பி 5, 6 ஆம் நூற்றாண்டுகளின் பின் முன் பகுதிகளாகும். தனித்தனியே சஞ்சரித்து வந்த இவர்கள் திருக்கோவலூரில் நெருக்கமான இடை கழி ஒன்றில் மழை பெய்த ஒருநாளிரவு ஒதுங்குவதற்காகச் சந்திக்க நேர்ந்த போது, இறைவன் இவர்கட்கு அருள்புரிய விரும்பி இவர்கட்கிடையில் நான்காமவராய் இருந்து இருளில் நெருக்க, அதனையறிய வேறு விளக்கின்மையால் தங்கள் ஞானமாகிய விளக்கேற்றிப் பாட, அப்பெருமான் அங்கு இவர்கட்குக் காட்சி கொடுத்தனர் என்பது இவர்களது சரித்திரச் சுருக்கமாகும். ‘பாவருந் தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநா ளிரவில், மூவரும் நெருக்கி மொழி விளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு’ என்பது வில்லி பாரதம் தற்சிறப்புப்பாயிரம். இவர்களுள், பொய்கையாரைச் ‘சாவவுங் கெடவும் பாட வல்லவரும், முக்காலமும் உணர்ந்தவருமாகிய இருடி’ என்று யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் கூறுவர். அவ்விருத்திகாரர் ஆரிடமான கவிகட்கு உதாரணங்காட்டி வருமிடத்து, ‘அவை, உலகியற்செய்யட் கோதிய உறுப்புகளில் மிக்குங் குறைந்தும் வரும்,’ என்றும், அவ்வாரிடம் பாடுதற்குரியார், ‘ஆக்குதற்குங் கெடுத்தற்கும் ஆற்றலுடையோராய் முக்காலமுமுணர்ந்த இருடிகள்,’ என்றும், அவராவார், பொய்கையார், குடமூக்கிற்பகவர், பூதத்தார், காரைக்காற்பேயார், மூலர் முதலியோர்’ என்றும் கூறுவர். இதனால், இவர்கள் முக்காலமுமுணர்ந்த மகரிஷிகள் என்பது பெறப்படுகின்றது. இவர்கள் அருளிச்செய்த நூல்கள், முறையே முதல் திருவந்தாதி, இரண்டாந் திருவந்தாதி, மூன்றாந்திருவந்தாதி என்பனவாம்.

   
வடக்குத் திருவீதிப்பிள்ளை : இவர் நம்பிள்ளையினுடைய பூர்ணமான திருவருளுக்குப் பாத்திரமானவர்; ஈடு முப்பத்தாறாயிரப் படி என்னும் வியாக்கியானத்தை எழுதி உபகரித்தவர்; மகாவிரக்த சீலர்; அஷ்டாதச ரஹஸ்யத்தை அருளிச்செய்த பிள்ளைலோகாசாரியரும், ஆசாரிய ஹ்ருதயம் அருளிச்செய்த அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் இவருடைய திருக்குமாரர்கள். கூரகுலோத்தம தாசர். இவருடைய மாணாக்கர் இவர் திருவரங்கத்தில் அவதரித்து, அங்கேயே வாழ்ந்தவர். திராவிட வேதாந்த தேசிகர், ஸ்ரீ கிருஷ்ணபாதர் என்னும் வேறு திருப்பெயர்களும் இவர்க்கு உண்டு.