|
ந
நிரூபிக்கும் பெரியார்க்கு
உரியது’ என்று தன் அரண்மனையிற் கட்டிய பொற்கிழியைத் திருமால் திருவருளால் இவர் சமயவாதியர்
பலரோடு வாதஞ்செய்து பரத்துவத்தை நிரூபணஞ்செய்து, வெற்றியடைந்து பெற்றவர்; அதனால்,
‘பட்டர் பிரான்’ என்ற சிறப்புப் பெயரும் அடைந்தவர். பட்டர்பிரான்-வித்துவான்களுக்குத்
தலைவர். இப்பெரியார் காலம், கி.பி. 8-ஆம் நூற்றாண்டாகும். இவர் அருளிச் செய்த நூல்கள்:
திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி என்பனவாம்.
மணவாளமாமுனிகள் :
இவர், பாண்டி நாட்டிலே திருநெல்வேலி
ஜில்லாவில் சிக்கில் கிடாரம் என்ற தலத்தில், ஐப்பசி மாதம், சுக்கிலபக்ஷம், சதுர்த்தசி,
வியாழக்கிழமை, மூல நக்ஷத்திரத்தில், திகழக்கிடந்தான் திருநாவீறுடைய அண்ணர் என்பவருக்குப்
புதல்வராய்த் தோன்றினார். இவரை ஆதிசேடனுடைய அமிசம் என்றும், இராமாநுசருடைய புனர் அவதாரம்
என்றும் கூறுவர் பெரியோர். திருவாய்மொழிப்பிள்ளை என்ற பெரியாரிடம் திருவாய்மொழி முதலான
திவ்வியப் பிரபந்தங்களின் வியாக்கியானங்களையும், மற்றை ரஹஸ்ய கிரந்தங்களையும் காலக்ஷேபங்கேட்டு,
அவற்றின் நுண் பொருளை அலகலகாக அறிந்தவர்; இராமா நுசரிடத்தில் பேரன்பு வாய்ந்தவராதலின்,
‘யதீந்திரப்ரவணர்’ என்ற திருப்பெயரைப் பெற்றவர். இவர்க்குப் ‘பெரிய ஜீயர்’
என்ற திருப்பெயர் பெரிய பெருமாளால் கொடுக்கப்பட்டது. முப்பத்தாறாயிரப்படி என்னும்
வியாக்கியானத்தைத் திருவரங்கத்து எம்பெருமானும் அவனடியார்களும் கேட்கும்படி காலக்ஷேபஞ்சாதித்தவர்;
முப்பத்தாராயிரப் பெருக்கர் என்ற திருப்பெயரையும் பெற்றவர்; சொந்த ஊராகிய ஆழ்வார்
திருநகரியை விட்டு நீங்கித் திருவரங்கத்திலேயே நித்திய வாசஞ்செய்தவர்; தம் ஆசாரியருடைய
நியமனத்தின்படி, அனைவரும் கேட்டு உய்யும்படி அருளிச்செயல்களின் ஆழ்பொருள்களை அள்ளிவழங்கியவர்.
இவர் அருளிச்செய்த நூல்கள்: தத்வத்திரயம், ரஹஸ்யத்திரயம், ஸ்ரீ வசன பூஷணம், ஆசார்ய
ஹ்ருதயம், ஞான சாரம், பிரமேயசாரம், பெரியாழ்வார் திருமொழிக்கும் இராமாநுச நூற்றந்தாதிக்கும்
வியாக்கியானங்கள், திருவாய்மொழி நூற்றந்தாதி, உபதேசரத்தினமாலை, ஆர்த்திப்பிரபந்தம்,
எதிராஜவிம்ஸதி, திருவாராதனக் கிரமம் என்னும் நூல்களும் பிறவுமாகும்.
முதலாழ்வார்கள்
: பொய்கையார்,
பூதத்தார், பேயார் என்ற இம்மூவரும் முதலாழ்வார்கள் என்று வழங்கப்படுவர். மற்றை ஆழ்வார்கட்கெல்லாம்
முன்னே அவதரித்தமையால், முதலாழ்
|