பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
45

New Page 1

போகவேளையில் தமக்கு உண்டானவை அடங்கப் பகவானுடைய திருவருளால் வந்தவை என்கைக்காக, 1‘நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன்’ என்று கருந்தரையைப் பேசி, 2‘ஒப்பில்லாத் தீவினையேனை உய்யக்கொண்டு’ என்று முடிக்கிறார் ஆதலின், பாவமே செய்து பாவிகளான ஆத்மாக்களும் சென்று சேரலாம் என்று தோற்று கையாலே, எல்லாரும் அதிகாரிகள் என்று அருளிச்செய்தார்.

    அதிகாரியைப் பெற்றாலும், உபாயம் சித்தம் ஆனாலும் பற்றுதல் இல்லாதபோது உய்வதற்குக் காரணம் ஆகாமையாலே, அப்பற்றுந் தன்மையைக் 3‘கழல்கள் அவையே சரணாகக் கொண்ட’ என்றும், சாங்க அநுஷ்டான வேளையில் 4‘அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேன்’ என்றும் அருளிச்செய்தார். 5இங்ஙனம் பற்றுதல் கைகூடுதல் தானும் இறைவனாலேயே என்னுமிடத்தை 6‘நின் பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றும், 7அதுவும் அவனது இன்னருளே’என்றும் அருளிச்செய்தார். பற்றும் தலைவனுடைய மனநிலையின் தன்மையினைக் 8‘களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்றிலேன் என்றும், 9‘நாடொறும், ஏக சிந்தையனாய்’ என்றும் அருளிச்செய்தார். இவ்வுபாயத்தைப் பிறர்க்கு உபதேசிக்கிற இடத்தில் 10’மற்று ஒன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத்து எவ்வுயிர்க்கும், சிற்ற வேண்டா சிந்திப்பே அமையும்,’ என்று உபாயத்தின் சுலபத்தை அருளிச்செய்து, இப்பிரபத்தியை வகைப்படுத்தி அருளிச்செய்கிற இடத்திலே இப்பிரபத்தி பக்திக்கு அங்கம் அன்று; தானே உபாயமாக இருந்து காரியத்தைச் செய்ய வல்லது’

 

1. திருவாய். 3. 3 : 4. கருந்தரை - பாழ்நிலம்; ‘ஒன்றும் இல்லாத இடம்’
  என்றபடி.

2. திருவாய். 7. 9 : 4.

3. திருவாய். 5. 8 : 11.

4. திருவாய். 6. 10 : 10.

5. ‘‘சரணாகக்கொண்ட’ என்றும், ‘அமர்ந்து புசூந்தேன்’ என்றும் கூறுதல்,
  இறைவன் நிர்ஹேதுகமாகத் திருவருள் புரிகிறான் என்று கூறுதற்கு
  முரணாகாதோ?’ என்னும் வினாவிற்கு விடையாக, ‘நின்பாதமே சரணாகத்
  தந்தொழிந்தாய்’ என்றும், ‘அதுவும் அவனது இன்னருளே’ என்றும்
  அருளிச்செய்கிறார். அந்த இச்சைதானும் இறைவனுடைய நிர்ஹேதுகமான
  திருவருள் காரணமாக உண்டானதே என்பது பொருள்.

6. திருவாய். 5. 7 : 10.

7. திருவாய். 8. 8 : 3.

8. திருவாய். 5. 8 : 8.

9. திருவாய். 5. 10 : 11.

10. திருவாய். 9. 1 : 7.