|
என
என்கைக்காக, 1‘சரணமாகும்’
என்று தொடங்கி, மரணமானால் வைகுந்தங் கொடுக்கும் பிரான்’ என்று பேறு முடிய முழுதினையும் நடத்தும்
என்று அருளிச்செய்தார், ‘இவ்வுபாயத்தையே உறுதியாக நம்பி இருக்கும் அவனுக்குக் காலக்ஷேபத்தின்
வகை இருக்கும்படி என்?’ என்னில், 2‘தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன்மாலைகள்
சொன்னேன், அண்டத்து அமரர் பெருமான் அடியேனே’ என்பதனால், ‘இத்திருவாய்மொழிதானே காலக்ஷேபப்
பிரகாரம்,’ என்று அருளிச்செய்தார்.
‘இப்படி உபாயத்தை
மேற்கொண்டு இதுவே போது போக்காகத் திரியும் அதிகாரிக்குப் 3பலம் யாது?’ எனின்,
ஐம்பொறிகளையும் அடக்கல் முதலாகக் கைங்கரிய சித்தி முடிவாக இருக்கும் இத்தனையும் உபாய பலம்
என்பதனை அருளிச்செய்தார். உபாசகர்கள் இறைவனைப் பற்றுவதற்கு இழியும்போது ஐம்பொறிகளையும்
அடக்கினவர்களாய்க்கொண்டு இழிதல் வேண்டும்; இந்தப்பிரபத்தி அதிகாரிக்கு ஐம்பொறிகளை
அடக்குதலும் இவ்வுபாயத்தின் பலமாம்; ‘யாங்ஙனம்?’ எனில், 4‘என்னைத் தீமனங் கெடுத்தாய்’
என்றும், 5‘மருவித் தொழும் மனமே தந்தாய்’ என்றும் இவர் தாமே அருளிச்செய்தார்
ஆதலின், ஐம்பொறிகளை அடக்குதலும் அவன் திருவருளாலேயாம் என்க.
‘ஐம்பொறிகளையும்
அடக்கினவன் ஆனவாறே பகவானுடைய அநுபவத்துக்கு உபகரணமான பக்தி முதலானவைகள் தமக்குத் தாமே உண்டாகின்றனவோ?’
என்னில், 6‘மயர்வற மதிநல மருளினன்’ என்று பக்தியின் நிலையினை அடைந்த ஞானத்தையும்
தானே தந்தான் என்று அருளிச் செய்கையாலே, பக்தி முதலானவைகள் தோன்றுதலும் அவன் திருவருளாலே
என்பதனை அருளிச் செய்தார். ‘ஆயின், தோன்றிய பக்திக்கு வர்த்தகர் யார்?’ என்னில்,
7‘காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி நங்கண்ணன்’
1.
திருவாய். 9. 10 : 5.
2. திருவாய். 9. 4 : 9. காலக்ஷேபம் - பொழுது போக்கல்.
3.
மேலே பலத்தின் தன்மையை அருளிச்செய்திருந்தும், ஈண்டும் ‘அதிகாரிக்குப்
பலம் யாது எனின்’
என்று அருளிச்செய்கிறார், அங்குக் கூறியது
உபாசகர்கட்கு என்றும், இங்கு அருளிச்செய்வது பிரபந்நர்கட்கு
என்றும்
வேறுபாடு தெரிவிப்பதற்காக.
4. திருவாய். 2. 7 : 8.
5. திருவாய். 2. 7 : 7.
6. திருவாய். 1. 1. 1.
7. திருவாய். 5. 3 : 4.
|