பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
48

ஸ்ரீ

ஈடு - மஹாப்பிரவேசம் - திருமகள் கேள்வன் - இரண்டு

    1திருமகள் கேள்வனாய், அடையப்பட்ட எல்லா விருப்பத்தையுமுடையவனாய், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையனான சர்வேஸ்வரன், ‘மாறிமாறிப் பல பிறப்பும் பிறந்து’ என்கிறபடியே, தொடர்ந்து வருகிற பிறவிகளிலே தோள்மாறித் திரிகிற இவரை இவ்வைம்பொருள்களையும் விசத தமமாக அறிய வல்லராம்படி முதலடியிலே நிர்ஹேதுகமாகச் சிறப்புறத் திருவருளைச் செய்தருளினான்.

    நம்மாழ்வார் திருவாய்மொழிப் பிரபந்தத்தாலே துவயத்தின் பொருளை விவரணம் செய்கிறார். இதில், முதல் மூன்று பத்துகளாலே இரண்டாம் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்; மேல் மூன்று பத்துகளாலே முதல் வாக்கியத்தின் பொருளை விவரிக்கிறார்; மேல் மூன்று பத்துகளாலே 2உபாயத்திற்குத் தகுதியான குணங்களையும், ஆன்மாவிலும், ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும்

 

1. ‘இறை, உயிர், நெறி, தஸட, பேறு’ ஆகிய இவ்வைம்பொருள்களின்
  நிலையினைப் பற்றிக் கூறுகின்றது திருவாய்மொழி என்று, மேல் பரக்க
  அருளிச்செய்து நின்ற ஆசிரியர், இப்பொழுது ‘துவயம்’ என்னும்
  மந்திரத்தினது பொருளைக் கூறுகின்றது திருவாய்மொழி என்று அருளிச்
  செய்யத் திருவுள்ளம் பற்றி, ஆழ்வாருடைய ஞானத்தின் சிறப்பினை
  மீண்டும் அருளிச்செய்கிறார், ‘திருமகள் கேள்வனாய் என்று தொடங்கி.
  இனி, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி என்னும் மூன்று
  பிரபந்தங்களும் திருமந்திரம், சரமஸ்லோகம் இவற்றினுடைய பொருளைக்
  கூறுகின்றன என்று திருவுளங்கொண்டு, ‘நம்மாழ்வார் திருவாய்மொழிப்
  பிரபந்தத்தாலே துவயத்தின் பொருளை விவரணம் செய்கிறார்,’ என்று
  அருளிச்செய்கிறார் என்று கோடலுமாம்.

      ‘நன்று; துவயத்தின் பொருளை அடைவே அருளிச்செய்யாது, பின்
  வாக்கியத்தின் பொருளை மூன்னும், முன் வாக்கியத்தின் பொருளைப்
  பின்னும் அருளிச் செய்யக் காரணம் யாது?’ எனின், அநுஷ்டான
  நிலையிற்போலே உபாயம் முற்பட்டுப் பலம் பிற்படுகையின்றி, அறிவு
  நிலையில் பலம் முற்பட்டு உபாயம் பிற்பட வேண்டுகையாலே துவயத்தின்
  பின் வாக்கியப் பொருளை முதல் மூன்று பத்துகளாலும், முன் வாக்கியப்
  பொருளை மேல் மூன்று பத்துகளாலும் அருளிச்செய்கிறார்.

2. ‘கடல் ஞாலங் காக்கின்ற மின்னு நேமியினாய்’ (7. 1 : 2.) என்றதனை
  நோக்கி, ‘உபாயத்திற்குத் தகுதியான குணங்களையும்’ என்கிறார். ‘உங்களோடு
  எங்கள் இடையில்லை’ (8. 2 : 7.) என்றதனை நோக்கி, ‘ஆன்மாவிலும்,
  ஆன்மாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் தமக்கு நசையற்றபடியையும்’
  என்கிறார்.