|
தமக
தமக்கு நசையற்ற படியையும்,
1அவனோடு தமக்கு உண்டான நிருபாதிக சம்பந்தத்தையும் அருளிச்செய்கிறார். பத்தாம்
பத்தாலே தாம் வேண்டினபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்.
இவற்றுள், முதற்பத்தாலே
2‘உயர்வற உயர்நலமுடையவன் யவன் அவன் - அயர்வறும் அமரர்கள் அதிபதியவன் அவன்
- துயரறு சுடரடி தொழுது எழு என் மனனே!’ என்றதனால் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும்
உருவமாகவுடையவனாய் வானவர்கட்கு இனியனானவன் திருவடிகளில் தொண்டு செய்தலே பேறு என்று உறுதி செய்து,
கூறிய பொருளுக்கும், இனிக்கூறப் புகும் பொருளுக்கும் பிரமாணம், 3‘உளன் சுடர்மிகு
சுருதியுள்’ என்றதனால் குற்றங்கள் அற்ற சுருதியே பிரமாணம் என்றும், ‘இத்தன்மைகளையுடையவன்
யார்?’ என்ன, 4‘வண்புகழ் நாரணன்’ என்றும் 5‘திருவுடை அடிகள்’ என்றும்
6‘செல்வ நாரணன் என்றும் சிறப்புற ஓதி, ‘தொழுது எழு என் மனனே!’ என்று தொடங்கி,
7‘அயர்ப்பிலன் அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே’ என்றதனால் முக்கரணங்களாலும்
அடிமை செய்து தலைக்கட்டுகையாலே 8‘பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம்,’
என்று அறுதியிட்டார்.
1.
‘நாராயணன் நங்கள் பிரான் அவன்’ (9. 3 : 1.) என்றதனை நோக்கி,
‘அவனோடு தமக்குண்டான
நிருபாதிக சம்பந்தத்தையும்’ என்கிறார். ‘தாம்
வேண்டினபடியே பெற்றபடியைச் சொல்லித் தலைக்கட்டுகிறார்’
என்றது, முதல்
முன்னம் ‘தொழுது எழு’ என்று தாம் வேண்டிக்கொண்டபடியே ‘அவா அற்று
வீடுபெற்ற’ என்று
தாம் பெற்ற படியைச் சொல்லி முடிக்கிறார் என்றபடி.
நிருபாதிகம் - காரணம் இல்லாதது.
2. திருவாய். 1. 1 : 1.
3. திருவாய். 1. 1 : 7.
4. திருவாய். 1. 2 : 10.
5. திருவாய். 1. 3 : 8.
6. திருவாய். 1. 10 : 8.
‘வண்புகழ்’ என்றும்,
‘திருவுடை’ என்றும், ‘செல்வம்’ என்றும் வருகின்ற
பதங்களைத் திருவுளங்கொண்டு, ‘சிறப்புற ஓதி’
என்கிறார்.
7. திருவாய். 1. 3 : 10. ‘அயர்ப்பிலன்’ என்றதனால் மனமும், ‘அலற்றுவன்’
என்றதனால் வாக்கும்,
‘தழுவுவன்’ என்றதனால் காயமும் போதருதலின்,
‘முக்கரணங்களாலும் அடிமை செய்து’ என்கிறார்.
8.
‘தொழுது எழு’ என்று தொடங்கி, ‘சொல் பணிசெய் ஆயிரம்’ (1. 10 : 11.)
என்று முடிக்கையாலே,
‘பகவானுக்குச் செய்யும் கைங்கரியமே புருஷார்த்தம்
என்று அறுதியிட்டார்’ என்கிறார்.
|