பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
50

இரண

இரண்டாம் பத்தால், இந்தக் கைங்கரியத்துக்கு விரோதியான 1உலகத் தொடர்பின் சம்மந்தத்தையுங்கழித்து, ‘ஒளிக்கொண்ட சோதியுமாய், இக்கைங்கரியத்துக்குத் தேசிகரான அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ?’ என்றதனால், தாமும் வேண்டிக்கொண்டு, 2‘நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்’ என்றதனால், பிறர்க்கும் உபதேசிக்கையாலே, ‘இவர்க்குப் பரமபதத்திலே நோக்காய் இருந்தது’ என்று நினைந்து, இறைவன் பரமபதத்தைக் கொடுக்கப் புக, 3‘எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்றதனால், ‘எனக்கு அதில் ஒரு நிர்பந்தம் இல்லை’ என்றும், 4‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே’ என்றதனால், ‘அவனுக்கேயாய் இருக்கும் இருப்பே எனக்கு வேண்டுவது,’ என்றும் இப்புருஷார்த்தத்தை அறுதியிட்டார்.

    மூன்றாம் பத்தால், 5இவர்க்குக் கைங்கரியத்தில் உண்டான ருசியையும், விரைவையும் கண்ட இறைவன், கைங்கரியத்துக்கு 6ஏகாந்தமான திருமலையில் நிலையைக் காட்டிக் கொடுக்கக் கண்டு, 7‘வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்’ என்று பாரித்து, பாரித்தபடியே, 8பாகவதர்களுக்கு அடிமை அளவாக வாசிகமாக

 

1. ‘களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று’
  என்றதனைத் திருவுளத்தே கொண்டு, ‘உலகத் தொடர்பின் சம்பந்தத்தையுங்
  கழித்து’ என்கிறார். இது, திருவாய். 2. 3 : 10.

2. திருவாய். 2. 8 : 4.

3. திருவாய். 2. 9 : 1.

4. திருவாய். 2. 9 : 4.

5. ‘இஃதே யான்உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும் என்
   மய்தோய் சோதி மணிவண்ண எந்தாய்’

  என்ற பாசுரத்தைத் திருவுளத்தே கொண்டு, ‘இவர்க்குக்
  கைங்கரியத்திலுண்டான ருசியையும்’ என்கிறார். ஞானக் கைதா; காலக்
  கழிவு செய்யேலே’ என்றும், ‘என்னையிண் பொன்னடிசேர்த்து ஒல்லை’
  என்றும் வருவனவற்றை நோக்கி, ‘விரைவையும் கண்ட இறைவன்’ என்கிறார்.

6. ‘கிளர் ஒளி இளமை,’ ‘ஒழிவில் கரலமெல்லாம்’ என்ற திருப்பதிகங்களைத்
  திருவுளத்தே கொண்டு, ‘ஏகாந்தமான திருமலையில் நிலையைக் காட்டிக்
  கொடுக்கக் கண்டு’ என்கிறார்.

7. திருவாய். 3. 1 : 1.

8. ‘பயிலுஞ்சுடரொளி மூர்த்தியை,’ என்ற திருப்பதிகத்தைத் திருவுளத்தே
  கொண்டு, ‘பாகவதர்களுக்கு அடிமை அளவாக வாசிகமாக அடிமை செய்து
  தலைக்கட்டுகிறார்’ என்கிறார். ‘வாசிகமாக அடிமை செய்து’ என்றது,
  பாசுரங்கள் மூலமாக அடிமை செய்து என்றபடி.