|
அ
அடிமை செய்து தலைக்கட்டுகிறார்.
1ஆக, முதல் மூன்று பத்துகளால் துவயத்தின் பின் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.
இனி, நான்காம்
பத்தால், இப்புருஷார்த்தத்துக்கு உபாயம் 2‘திருநாரணன் தாள்’ என்றும், விரோதி
3‘குடிமன்னும் இன்சுவர்க்கம்,’ 4‘எல்லாம் விட்ட இறுகல் இறப்பு’ என்பனவற்றால்,
ஐசுவரிய கைவல்யங்களே விரோதி என்றும் பிறர்க்கு உபதேசித்து, 5‘ஐங்கருவி கண்ட
இன்பம் தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்’ என்று தாமும் சொல்லிப் போந்தார். ஐந்தாம்
பத்தால், விரும்பியவற்றை அடைவதற்கும், விருப்பம் இல்லாதனவற்றை நீக்குவதற்கும் 6‘ஆறு
எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்’ என்றதனால், இறைவன் தன் திருவடிகளையே உபாயமாகத்
தந்தான் என்றார். ஆறாம்பத்தால், அவன் தந்த உபாயத்தைச் 7சேர்ப்பாரை முன்னிட்டுப்
பெரிய பிராட்டியார் புருஷகாரமாக 8‘அலர்மேல்மங்கை உறைமார்பா, உன் அடிகீழ் அமர்ந்து
புகுந்தேன்’ என்ற
1. ஆக, முதல் மூன்று பத்துகளால் துவயத்தின் பின் வாக்கியத்தின் பொருள்
கூறப்பட்டது என்றது,
‘ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்னும் பின் வாக்கியத்தின்
முதல் இரண்டு பதங்களின் பொருளை முதற்பத்தாலும்,
‘நம:’ என்னும்
மூன்றாம் பதத்தின் பொருளை இரண்டாம் பத்தாலும் அருளிச்செய்தார்
எனவும், முதலிரண்டு
பத்துகளில் கூறப்பட்ட இறைவனுக்குச் செய்யும்
கைங்கரியம், அவனுடைய ‘அடியார்கட்கு அடிமை’ என்ற
அளவிலும் சேறல்
வேண்டுமென்று அறுதியிட்டு, அங்ஙனம் அறுதியிட்டதற்குத் தகுதியாகத்
தமது அநுஷ்டானத்தையும்
அருளிச் செய்தார் மூன்றாம் பத்தால் எனவும்
தெரிவித்தபடி.
2. திருவாய். 4. 1 : 1.
3. திருவாய். 4. 1 : 9.
4. திருவாய். 4. 1 : 10.
5. திருவாய். 4. 9 : 10.
இங்கு, ‘குடிமன்னும்
இன்சுவர்க்கம்’ என்றதனால் செல்வமும், ‘எல்லாம்
விட்ட இறுகல் இறப்பு’ என்றதனால் கைவல்யமும்,
‘ஐங்கருவி கண்ட இன்பம்’
என்றதனால் செல்வமும், ‘தெரிவு அரிய அளவு இல்லாச் சிற்றின்பம்’
என்றதனால் கைவல்யமும் கொள்க.
6. திருவாய். 5. 7 : 10.
7. ‘சேர்ப்பாரை முன்னிட்டு’ என்றது, ‘வைகல் பூங்கழிவாய்,’
‘பொன்னுலகாளீரோ’ என்ற இரண்டு திருப்பதிகங்களில்
தூது விடுகின்ற
முகத்தால் ஆசாரியனை முன்னிட்டு என்றபடி.
8. திருவாய். 6. 10 : 10.
|