பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
52

தன

தனால் ஏற்றுக்கொண்டார். ஆக, இம்மூன்று பத்துகளாலும் (4 - 6) 1துவயத்தின் முன் வாக்கியத்தின் பொருள் கூறப்பட்டது.

    ஏழாம்பத்தால், 2இப்படிச் சித்தோபாயத்தை ஏற்றுக்கொண்டிருந்தும் சடக்கெனப் பலியாமையாலே துயர் உற்றவராய்க் 3‘கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்’ என்று தொடங்கி, உபாயத்திற்கு உபயோகியான குணங்களைச் சொல்லிக் கூப்பிட 4‘கூரார் ஆழி வெண்சங்கு ஏந்திக் கொடியேன்பால், வாராய்’ என்று இவர் ஆசைப்பட்டபடியே, 5‘வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி’ வந்து காட்சியளித்தான்; அளித்த இது, மானச அனுபவ மாத்திரமேயாய்ப் புறச்சேர்க்கைக்குக் கிடையாமையாலே 6பிரிந்தபடியை அருளிச் செய்தார்.

    எட்டாம் பத்தால், 7மேலே கிடைத்த மனக்காட்சி, வெளியில் புறக்கண்களாலும் காண இவர் விரும்பியவாறு கிடையாமையாலே

 

1. ‘ஆக, இம்மூன்று பத்துகளாலும் துவயத்தின் முன் வாக்கியத்தின் பொருள்
  கூறப்பட்டது,’ என்றது, ‘ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே’ என்ற
  முன் வாக்கியத்தின் ‘ஸ்ரீமத்,’ ‘நாராயணசரணௌ’ என்னும் முதல் இரண்டு
  பதங்களின் பொருளை நாலாம் பத்தாலும், ‘சரணம் பிரபத்யே’ என்னும்
  மூன்றாம் பதத்தின் பொருளை ஐந்தாம் பத்தாலும் அருளிச்செய்தார்
  எனவும், அங்ஙனம் அருளிச்செய்தவாறே, ஆசாரியனை முன்னிட்டுப்
  பெரிய பிராட்டியார் புருஷகாரமாக இறைவனைப் பற்றும் தம்முடைய
  அநுஷ்டானத்தை ஆறாம்பத்தால் அருளிச் செய்தார் எனவும் தெரிவித்தபடி.

  ‘செய்யவ ளைக்குரு வின்அரு ளால்திருத் தாள்வணங்கி
  செய்ய வளைக்குலஞ் சூழரங் கேசன் சிறிதமுது
  செய்ய அளைக்கும் புவிக்கும்அங் காந்தசெவ் வாய்முகுந்தன
  செய்ய வளைக்குஞ் சிலம்பணி பாதங்கள் சேர்ந்தனமெ.’

  (திருவரங்கத். 2.) என்னும் திவ்விய கவியின் திருவாக்கை இங்கு ஒப்பு
  நோக்குக.

2. சித்தோபாயம் - சித்தமாக இருக்கும் உபாயம்; அதாவது, இறைவன்.
  ‘துயருற்றவராய்’ என்றது, ‘உண்ணிலாவிய’ என்னும் திருப்பதிகத்தை நோக்கி.

3. திருவாய். 7. 1 : 2.

4. திருவாய். 6. 9 : 1.

5. திருவாய். 7. 3 : 1.

6. ‘பாமரு மூவுலகும் படைத்த,’ ‘ஏழையர் ஆவி உண்ணும்’ என்ற
  திருப்பதிகங்களை நோக்கிப் ‘பிரிந்தபடியை அருளிச்செய்தார்’ என்கிறார்.

7. ‘ஆழி எழச் சங்கும் வில்லும் எழ,’ கற்பார் இராமபிரானை அல்லால் மற்றுங்
  கற்பரோ’ என்னும் திருப்பதிகங்களில் கூறப்படும் அனுபவத்தை நோக்கி,
  ‘மேலே கிடைத்த மனக்காட்சி’ என்கிறார்.