பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
முதல் தொகுதி
 
53

1

1‘உமர் உகந்து உகந்த உருவம் நின் உருவமாகி உன்றனக்கு அன்பரானார், அவர் உகந்து அமர்ந்த செய்கை உன் மாயை’ என்கிறபடியே, 2அடியார்கட்கு அதீனப்பட்ட சொரூபம் ஸ்திதி முதலான வைகளையுடையவன் நமக்குத் தன்னைக் காட்டி மறைக்கைக்குக் காரணம், ஆத்துமாவிலும் ஆத்துமாவோடு சம்பந்தப்பட்ட பொருள்களிலும் ஏதேனும் நசை உண்டாகவேண்டும் என்று ஐயங்கொண்டு, 3அவற்றில் நசை அற்றபடியை அருளிச்செய்தார்.

    ஒன்பதாம் பத்தால், 4‘நீர் என்றிய ஐயங்கொண்டு படுகிறீர் இப்படி?’ என்று தன்னுடைய நிருபாதிக சம்பந்தத்தையும் காட்டி., ‘நாம் நாராயணன்; எல்லா ஆற்றல்களோடும் கூடினவன்; உம்முடைய விருப்பமனைத்தையும் முடிக்கிறோம்’ என்று அருளிச்செய்ய,. 5‘சீலம் எல்லை இலான்’ என்று அவனுடைய சீல குணங்களிலே ஆழங்கால்பட்டார்.

    பத்தாம் பத்தால், ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்டு, 6‘திருமோகூரிலே தங்கு வேட்டையாக வந்து தங்கி, இவர்க்கு 7அர்ச்சிராதிகதியையுங் காட்டிக்கொடுத்து, இவர் வேண்டிக் கொண்டபடியே 8‘என் அவா அறச் சூழ்ந்தாயே’ என்று இவர் திருவாயாலே அருளிச்செய்யும்படி பேற்றினை அளித்தபடியை அருளிச்செய்கிறார்.

 

1. திருவாய். 8. 1 : 4.

2. ‘மனக்கோள் நினக்கென வடிவு வேறு இலையே’ என்ற பரிபாடற்பகுதி
  ஒப்பு நோக்குக.

(பரிபா. 4 - 56.)

3. ‘உங்களோடு எங்கள் இடையில்லை’ (8. 2 : 7.) என்றதனை நோக்கி,
  ‘அவற்றில் நசை அற்றபடியை அருளிச்செய்தார்’ என்கிறார்.

4. ‘ஓராயிரமாய் உலகு ஏழ் அளிக்கும்’ என்ற திருப்பதிகத்திலே நோக்காக, ‘நீர்
  என்றிய ஐயங்கொண்டு பருகிறீர் இப்படி?’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். என்றிய - எதற்காக?

5. திருவாய். 9. 3. : 11.

6. ‘தாள தாமரை’ என்ற திருப்பதிகத்தைத் திருவுளம் பற்றித் ‘திருமோகூரிலே
  தங்குவேட்டையாக வந்து தங்கி’ என்கிறார்.

7. சூழ்விசும்பு அணிமுகில் தூரியம் முழக்கின’ என்ற திருப்பதிகத்தைத்
  திருவுளம் பற்றி ‘அர்ச்சிராதிகதியையும்’ என்கிறார். அர்ச்சிராதிகதி - அந்தம்
  இல் இன்பத்து அழிவில் வீட்டிற்குச் செல்லும் வழி.

8. திருவாய். 10. 10 : 10.