|
பு
புகுந்து, அவற்றிற்குப்
பொருளாகை, பெயர் பெறுகை என்னும் இவை உண்டாகும்படி செய்தும், இவை முற்றும் அழிந்த அன்று, நீறு
பூத்த நெருப்புப்போன்று கண்களுக்குத் தோன்றாத மிக நுண்ணிய உருவத்தோடு தன் பக்கலிலே கிடக்கும்படி
இவற்றை ஏறிட்டுக்கொண்டு தரித்தும், காரணநிலையோடு காரிய நிலையோடு வாசி அறத் தன்னைப்பற்றி
1ஸ்வரூய ஸ்திதி முதலியவை ஆகும்படி இருப்பதனால் அவன் அதீநம் என்கிறார். உலகத்திலுள்ள
எல்லாப் பொருள்களையும் தனித்தனியே எடுத்து, ‘இது அவன் உடைமை, இது அவன் உடைமை’ என்று கூறப்புகின்,
உயிர்கள் மிகப்பலவாய் இருப்பதனால், மிக விரிந்து செல்லும்; இனிச்சுருங்கக்கூறின், அறிந்துகொள்ளுவதற்கு
அருமையாம்; ஆகையாலே, தேவர்கள் முதலிய பொருள்களை நாலு மூன்று வகையாலே சேர்த்துத் தொகுத்து
அவையவை இறைவனுக்கு உரிமைப்பட்டவை என்கிறார்.
நாம் - நான் என்றும்,
நாம் என்றும், யான் என்றும், யாம் என்றும் தந்தம்மைச் சொல்லக்கடவது. ஒரு பொருளின் அணிமை
சேய்மை முதலிய தூரங்களைக் குறிக்க வேண்டுமாயின், பேசுமிடத்தினை எல்லையாகக்கொண்டே குறிக்க
வேண்டுதலின், ‘நாம்’ என்பதனை முதலில் அருளிச்செய்கிறார். அவன் இவன் உவன் - சேய்மையிலுள்ளவன்
அண்மையிலுள்ளவன் இரண்டு அல்லாத நடு இடத்துள்ளவன் என்று கூறப்படுகின்ற பொருள்களும். அவள் இவள்
உவள் எவள் - பெண்பாலால் உணரப்படுகின்ற பொருள்களும். தாம் அவர் இவர் என்றது - உயர்விற்கு
உரியவர்கள். அது இது உது எது - ஒன்றன் பாலால் உணரப்படுகின்ற பொருளைச் சொல்லுகிறார்.
வீமவை இவை உவை - அழிகின்ற பொருள்கள். நலம் அவை தீங்கவை - 2நன்மை தீமை என்னுதல்,
நன்றானவை தீதானவை என்னுதல். ஆமவை ஆயவை - இறப்பிலும் எதிர்விலும் அடங்குமாதலின், நிகழ்காலத்தைக்
கூறிற்றிலர். ஆய்நின்ற - ஆகிநின்ற பொருள்கள். 3இவற்றைப் பொருள்கள் அளவிலே
கொண்டபோது,
1.
ஸ்வரூப ஸ்திதி முதலியவை - பொருள்களின் நிலைமுதலியவை; ஸ்வரூபம்:
ஸ்வ - தன்னுடைய, ரூபம் -
தன்மை.
2. நன்மை தீமை என்பன பண்பினையும், நன்றானவை தீதானவை என்பன
பண்புடைப் பொருள்களையுங் காட்டும்.
3.
‘இவற்றை’ என்றது, பாட்டில் ‘நாமவன்’ என்பன முதலிய
பெயர்ப்பொருள்களை ‘ஐக்யம் சொல்லப்போகாது’
என்றது, ‘ஆய்நின்ற
அவர்’ என்றதனால் சாமாநாதிகரண்யத்தால் வந்த ஐக்யம், மேற்சொல்லுகின்ற
பரம்பொருளுக்கும் இவற்றுக்கும் சொல்லப்போகாது என்றபடி.
|