வ
116 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
வாற்றாமையால் வந்த
கிலேசம் இது கற்றவர்களுக்கு அனுபவிக்க வேண்டாமல், 1‘அடியார்கள் குழாங்களை உடன்
கூடுவது என்று கொலோ!’ என்று இவர் ஆசைப்பட்டபடியே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப்பெறுவர்.
(11)
முதற்பாட்டில்,
‘அடியார்களுடைய ஆபத்தே செப்பேடாக உதவும் தன்மையினை உடையவன், இவளுடைய ஆபத்துக்கு வந்து
உதவுகின்றிலன்,’ என்றாள்; இரண்டாம் பாட்டில், ‘‘விரோதி உண்டே’ என்பது இறைவனுக்கு நினைவாக,
‘வாணனுடைய தோள் வலியிலும் வலிதோ இவளுடைய விரோதி?’ என்றாள்; மூன்றாம் பாட்டில், ‘இப்படிச்
செய்ய நினைத்த நீர், முன்பு அச்செயலை எதற்காகச் செய்தீர்?’ என்றாள்; நான்காம் பாட்டில்,
‘அது பொறுக்க மாட்டாமல் அதுதன்னையே உபகாரமாகச் சொல்லாநின்றாள்,’ என்றாள்; ஐந்தாம் பாட்டில்,
‘அவ்வளவிலும் வாராமையாலே, அருள் இல்லாதவன்’ என்றாள் திருத்தாய்; ஆறாம் பாட்டில், அது பொறுக்கமாட்டாமல்,
‘கெடுவாய்! ஆகரத்தில் தகவு மறுக்குமோ? அது நம் குறைகாண் என்கிறாள்,’ என்றாள்; ஏழாம் பாட்டில்,
‘அவன் குணம் இன்மைதன்னையே குணமாகக் கொள்ளும்படி இவளை வஞ்சித்தான்,’ என்றாள்; எட்டாம்
பாட்டில், ‘உம்மைத் தஞ்சமாகப் பற்றின இவள் படும் பாடே இது?’ என்றாள்; ஒன்பதாம் பாட்டில்,
‘இவள் பேற்றில் நீர் செய்தருள நினைத்திருக்கிறது என்?’ என்றாள்; பத்தாம் பாட்டில்,
‘எஞ்சி நிற்பது நோக்கு ஒன்றுமேயாயிற்று; இஃது ஒன்றையும் நோக்கிக் கொள்ளீர்,’ என்றாள்;
முடிவில், இத் திருவாய் மொழியைக் கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.
திருவாய்மொழி நூற்றாந்தாதி
ஆடிமகிழ் வானில் அடியார்
குழாங்களுடன்
கூடிஇன்பம் எய்தாக்
குறையதனால் - வாடிமிக
அன்புற்றார் தம்நிலைமை
ஆய்ந்துரைக்க மோகித்துத்
துன்புற்றான் மாறன்அந்
தோ!
(14)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
____________________________________________________________
1.
திருவாய்.
2. 3 : 10
|