பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

என

118

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

என்று கூப்பிட்ட துக்க ஒலியானது செவிப்பட, ‘அழகிதாக நாம் உலகத்தைப் பாதுகாத்தோம்! நாம் ஆரானோம்!’ என்று, பிற்பட்டதனால் உண்டாகும் 1நாணத்தாலும் பயத்தாலும் கலங்கினவனாய், தன்னுடைய 2சொரூப ரூப குணங்கள் ஒப்பனை, திவ்ய ஆயுதங்கள் சேர்ந்த சேர்த்தி, இவை எல்லாவற்றோடும் வந்து கலந்து அத்தாலே மகிழ்ந்தவனாய், தான் செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்து முடித்தவனாய் இருக்கிற இருப்பை அனுபவித்து, அவ்வனுபவத்தால் உண்டான மகிழ்ச்சியின் மிகுதியால் தாம் பெற்ற பேற்றைப் பேசி அனுபவிக்கிறார்.

 

155

 

        அந்தாமத்து அன்புசெய்துஎன் ஆவிசேர் அம்மானுக்கு
        அந்தாமம் வாழ்முடிசங்கு ஆழிநூல் ஆரம்உள;
        செந்தாம ரைத்தடங்கண்; செங்கனிவாய் செங்கமலம்;
        செந்தா மரை3அடிகள்; செம்பொன் திருஉடம்பே..

 

    பொ - ரை : ‘அழகிய பரமபதத்தில் உள்ள நித்தியசூரிகளிடத்தில் செய்யும் அன்பினை என்னிடத்திற்செய்து, என் உயிரோடு கலந்த அம்மானுக்கு, அழகிய மாலையானது வாழ்கிற திருமுடி, சங்கு, சக்கரம், பூணூல், முத்துமாலை முதலிய மாலைகள் ஆகிய இவை எல்லாம் உள்ளன; கண்கள் செந்தாமரைமலர்கள் மலர்ந்திருக்கின்ற தடாகம் போன்று உள்ளன; செந்நிறம் வாய்ந்த திருவாயானது, செங்கமலமாய் இருக்கின்றது; திருவடிகளும் செந்தாமரையாய் இருக்கின்றன; திருமேனி சிறந்த பொன்னாகவே இருக்கிறது’, என்பதாம்.

 

    வி-கு : தாமம் - இடம்; இங்கே பரமபத்தினைக் குறித்தது. ‘தண் தாமம் செய்து’ என்றார் முன்னும் (1. 8 : 7.) ‘செய்து சேர்ந்த அம்மான்’ என்க, தாமம் - மாலை. சேர் அம்மான், வாழ்முடி - நிகழ்கால வினைத்தொகைகள்.

 

    இத்திருவாய்மொழி, நாற்சீரடி நான்காய் வருதலின் தரவுகொச்சகக்கலிப்பா எனப்படும்.

____________________________________________________________

1. ‘நாணத்தாலும் பயத்தாலும்’ என்றது, ‘முடித்துவிடுவாரோ!’

 

2. ‘செம்பொன் திருஉடம்பு’, ‘பலபலவே ஆபரணம்’, ‘ஆழி நூல் ஆரம்’ என்பன போன்ற
  பாசுரப் பகுதிகளை நோக்கி, ‘சொரூப ருப’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். ‘கலந்து’
  என்றது, ‘என்னுள் கலந்தவன்’ என்றதனை நோக்கி என்க. ‘மரதகக் குன்றம் ஒக்கும்’,
  ‘ஆரா அமுதமாய்’ என்பன போன்ற பாசுரப் பகுதிகளை நோக்கி, ‘மகிழ்ச்சியின்
  மிகுதியால்’ என்கிறார்.

 

3. ‘அடிக்கள்’ என்பது முன் உள்ள பாடம்.