என
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 5 |
129 |
என்னும் இரண்டனையும்
எழுவாயாகக் கொள்க. இழைக்கப்படுதலின், ஆபரணம் இழையாயிற்று. இழைதல் - செய்தல்.
‘அமுதமாய்க் கலந்த என் அம்மான் கண்ணன்’ என்க.
ஈடு :
ஐந்தாம் பாட்டு. 1இத்தனை போதும் தாமரையைச் சிக்ஷித்து உபமானமாகச் சொல்லிப்
போந்தார்; விஷயத்திலே இறங்கிப் பார்த்தவாறே நேர்கொடு நேரே உபமானமாய் நின்றது இல்லை;
அவற்றைக் கழித்து உபமேயத்தையே சொல்லுகிறார்.
ஆரா அமுதமாய்-எப்போதும்
உண்ணாநின்றாலும் மேன்மேலென விருப்பத்தை விளைக்கும் அமிருதம் போன்று எல்லை இல்லாத இனியனாய்.
அல் ஆவி - ‘இப்படி, 2போக்யம் குறைவற்றால் போக்தாக்களும் அதற்குத் தகுதியாகப்
பெற்றதோ? எனின், ‘ஒரு பொருளாக எண்ணா ஒண்ணாத என்னுடைய உயிரோடே அன்றோ வந்து கலந்தது?
தன்னையும் அறிந்திலன், என்னையும் அறிந்திலன்’ என்பதாம். அசித்தைக்காட்டிலும் தம்மைக் குறைய
நினைத்தபடியாலே ‘அல் ஆவி’ என்கிறார். அசித்திற்கு 3இழவு இல்லையே’ தன்
சொரூபத்தில் கிடந்ததே; அறிவுள்ள பொருளாய் இருந்தும் ஞானபலம் இல்லாமையாலே அசித்தைக்காட்டிலும்
தம்மைக் குறைய நினைத்திருக்கிறார். ஆவி உள் கலந்த - ‘பெருமக்கள் உள்ளவரான நித்திசூரிகள்
அளவில் கலக்குமாறு போன்று தான் கலந்தானோ? என்னை ஆரா அமுதாக நினைத்து, என் அளவாகத் தன்னை
நினைத்து அன்றோ கலந்தது?’ இனி, ‘உள் கலந்த’ என்பதற்கு ‘ஒரே பொருள் என்னலாம்படி கலந்தான்’
எனலுமாம்.
‘அவன் இப்படிக்
கலந்தமையை நீர் என்கொண்டு அறிந்தது?’ என்னில், ‘வடிவிலே, 4தொடை கொண்டேன்’
என்கிறார் மேல்;
_____________________________________________________________
1. மேல், உபமானமான தாமரையைச்
சிக்ஷித்து ஒப்பாகச் சொல்லிப் போந்தவர், இங்கு
‘நேராவாம்’ என்று சொன்னதற்குப் பிரயோஜனம்
அருளிச்செய்கிறார் ‘இத்தனை போதும்’
என்று தொடங்கி. சிக்ஷித்தல் - சிறிது விசேஷணமிட்டுக்
கூறுதல். மூன்றாம் அடியின்
பொருளை நோக்கி ‘உபமேயத்தையே சொல்லுகிறார்‘ என்கிறார்.
2. போக்கியம் - இனிய
பொருள். போக்தா - அனுபவிக்கிறவன்.
3. ‘இழவு இல்லையே’ என்றது,
‘அசித்துக்கு ‘இழந்தோம்’ என்னும் அறிவு இல்லையே!’
என்றபடி. ‘தன் சொரூபத்தில் கிடந்ததே’
என்றது, ‘வேறு பொருள் என்று நினைத்தற்கு
இடமில்லாமலே கிடந்தது’ என்றபடி. ‘ஞானபலமில்லாமையாலே’
என்றது, பகவானுடைய
சேர்க்கைக்குத் தகுதி அற்றவன் என்னும் ஞானபலமில்லாமையாலே என்றவாறு.
4. தொடை கொண்டேன் - கிரஹித்தேன்;
அறிந்தேன்.
|