160
|
ஐந்தாந்திருவாய்மொழி - பா. 6 |
131 |
160
பலபலவே ஆபரணம்;
பேரும் பலபலவே;
பலபலவே சோதி வடிவு;
பண்புஎண்ணில்
பலபல கண்டுஉண்டு கேட்டுஉற்று
மோந்துஇன்பம்;
பலபலவே ஞானமும்
பாம்பணைமே லாற்கேயோ!
பொ - ரை :
‘பாம்பணையின்மேல் அறிதுயில் செய்கின்ற
இறைவனுடைய பண்புகளை எண்ணுமிடத்து, ஆபரணங்கள் பலபலவாம்; பேரும் பலபலவாம்; ஒளி உருவமான திருமேனியும்
பலபலவாம்; கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து அனுபவிக்கிற இன்பங்களும் பல பலவாம்; ஞானமும்
பலபலவாம்’ என்றவாறு.
வி-கு :
‘கண்டு உண்டு கேட்டு உற்று மோந்து’ என்பது உம்மைத் தொகை. ‘கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும்
ஐம்புலனும்’ என்றார் திருவள்ளுவர். ‘உண்டு கேட்டு உற்று மோந்து பார்க்கும் ஐவர்’ என்றார் திவ்வியகவி.
‘பாம்பணை மேலாற்கு’ என்ற தொடர் மொழி, ஒரே காலத்தில் ஐம்பொறிகட்கும் ஒருசேர இன்பத்தை
ஊட்ட வல்ல பரிகரத்தை உடையவன் இறைவன் என்ற கருத்தை உட்கொண்டு நிற்கிறது. ஏகாரம். ஈற்றசை.
ஓகாரம் - சிறப்புப் பொருளின் கண் வந்தது.
ஈடு : ஆறாம் பாட்டு.
‘என்னுடனே கலந்து 1ஆற்றானாய்ப் பல சரீரங்களை மேற்கொண்டு என்ன அனுபவியாநின்றான்’
என்கிறார்.
பலபலவே ஆபரணம் -
சாதி பேதமும் வடிவு பேதமும் இருக்கிற படி. திருக்கைக்குச் சாத்துமவை என்றால், பல; அவைதாம்,
2‘இடைச்சரி, கடைச்சரி’ என்பன போல்வன. பேரும் பலபலவே-அனுபவ சமயத்தில் திருப்பெயர்களைச்
சொல்லுதற்கு இழிந்த இடமெல்லாம் துறை; அவைதாம் 3‘சீலப்பேர், வீரப்பேர்’ என்பன
போல்வன. பலபலவே சோதி வடிவு - 4அத்திருப்பெயர்கள் மூலமாகக் காணும் வடிவுகளும்
பல; இறைவன் பிரகிருதி சம்பந்தம் இல்லாத தனது திருமேனியை, மற்றைச் சாதிகட்குச் சமமாக்குகிறான்
ஆகை
_____________________________________________________________
1. ‘ஆற்றானாய்’ என்றது,
‘ஒரு சரீரத்தாலே அனுபவிக்க விருப்பம் இல்லாதவனாகி’
என்றபடி.
2. சரி - வலையம். இடைச்சரி
- தோள் வளை முதலானவை. கடைச்சரி - முன் கை வளை.
3. சீலப்பேர் - கோவிந்தன்
என்பது போன்ற திருப்பெயர்கள். வீரப்பேர் - மதுசூதனனன்
என்பது போன்ற திருப்பெயர்கள்.
4. அவதாரங்களில் கொள்ளும்
வடிவினைக் குறித்தது.
|