ப
142 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
படியாய் வந்து கலந்தான்
என்றார்; நான்காம் பாட்டில், மேல் உவமையாகச் சொன்ன பொருள்கள் நேர் நில்லாமையாலே,
அவற்றைச் சிக்ஷித்துச் சேர்த்துக்கூறி அனுபவித்தார்; ஐந்தாம் பாட்டில், அவைதாமும் உவமையாக நேர்
நில்லாமையாலே, அவற்றைக் கழித்து உபமேயந்தன்னையே அனுபவித்தார். ஆறாம் பாட்டில், ‘இப்படி
எல்லாரைக்காட்டிலும் வேறுபட்ட தன்மையினையுடைய இறைவன், முத்தன் தன்னை அனுபவிக்குமாறு போன்று,
தான் என்னை அனுபவித்தான்’ என்றார்; ஏழாம் பாட்டில், தமக்காக இராமன் கிருஷ்ணன் முதலிய
அவதாரங்களைச் செய்தான் என்றார்; எட்டாம் பாட்டில், ‘அவனை என்னாற்பேச முடியாது’ என்றார்;
ஒன்பதாம் பாட்டில், துணை தேடிக் கொண்டு மீண்டும் பேசுவதற்குத் தொடங்கினார்; ‘பத்தாம் பாட்டில்’,
‘இப்படிகளால் என்னோடே கலந்து இம்மகாகுண ஒன்றையும் பேச என்றால் சால மிறுக்குடைத்து’ என்றார்;
முடிவில், இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக் கட்டினார்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
அந்தாமத்து அன்பால்
அடியார்க ளோடுஇறைவன்
வந்துஆரத் தான்கலந்து
வண்மையினால் - சந்தாபம்
தீர்ந்தசட கோபன்
திருவடிக்கே நெஞ்சமே!
வாய்ந்தஅன்பை நாடோறும் வை.
(15)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|