ஆற
ஆறாந்திருவாய்மொழி
-‘வைகுந்தா’
முன்னுரை
ஈடு :
‘ஆடி ஆடி’ என்னும் திருவாய்மொழியில் உண்டான துன்பம் தீர வந்து கலந்தபடியை ‘அந்தாமத்து அன்பு’
என்ற திருவாய்மொழியில் அருளிச்செய்தார்; அச்சேர்க்கையால் பிறந்த பிரீதி அவனது என்னுமிடத்தைச்
சொல்லுகிறார் இத்திருவாய் மொழியில். 1‘பிரணயி பிரீதி அநுசந்தானங்காண் இது’
என்று ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்வர். அதாவது, ஆழ்வார் விஷயமாகச் சர்வேஸ்வரனுக்கு உண்டான பிரீதி
சொல்லுகிறது இத் திருவாய்மொழியில் என்றபடி. இனி, ‘ஊனில் வாழ்’ என்ற திருவாய்மொழியில்,
‘ஆழ்வார், தாம் பகவானை அனுபவித்துத் தமக்கு அவன் பக்கலுண்டான பிரேமம் அவன் அளவில் முடிவு பெறாது,
‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ!’ என்று அவன் அடியார் அளவும் சென்றபடியை
அருளிச்செய்தார்; இத்திருவாய்மொழியில், ‘சர்வேஸ்வரன் ஆழ்வார் பக்கல செய்த பிரேமம்
இவர் ஒருவர் அளவில் நில்லாது, சம்பந்திகள் அளவும் வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’
என்று இயைபு கூறலுமாம். இரண்டு தலைக்கும் ரசம் மிகுந்தால் சம்பந்தி சம்பந்திகள் அளவும் செல்லும்
அன்றே? ‘எமர் கீழ் மேல் எழு பிறப்பும் விடியா வெந்நரகத்து என்றும் சேர்தல் மாறினர்’ என்பது
இவருடைய திருவாக்கு.
2உபய
விபுதிகளையுடையவனாய், மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உருவமாக உடையவனாய், எல்லா
வகையாலும்
_____________________________________________________________
1. பிரணயி - காதலன்; சர்வேஸ்வரன்
‘ஆடியாடி’ என்றது முதல், ‘பிரீதி சொல்லுகிறது
இத்திருவாய்மொழியில்’ என்றது முடிய, ‘உன்னை நான்
பிடித்தேன், கொள் சிக்கெனவே’
என்ற பாசுரப் பகுதியை நோக்கி, ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹம்.
இனி, ‘ஊனில் வாழ்’
என்றது முதல் ‘வெள்ளம் இடுகிறபடியை அருளிச்செய்கிறார்’ என்றது முடிய,
‘எமர் கீழ்
மேல் எழு பிறப்பும். விடியா வெந்நகரத்து என்றும் சேர்தல் மாறினரே’ என்ற
பாசுரப்பகுதியை நோக்கிய வேறு நிர்வாஹம்.
2. ‘உபய விபூதிகளையுடையவனாய்’
என்றது முதல் ‘அவனை உளனாக்குகிறார்’ என்றது"
முடிய, ஸ்ரீ ஆளவந்தார் நிர்வாஹ விவரணம். ‘ உபயவிபூதிகளையுடையவனாய்’
என்றது
முதல் ‘மகிழ்ச்சியுடையவனாய்’ என்றது முடிய, மேல் திருவாய்மொழியின் அநுவாதம்.
|