ந
144 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
நிறைந்தவனான தான், தன்
படிகளுள் ஒன்றும் குறையாதபடி வந்து இவரோடே கலந்து, அகலவிதான தன் பேறு என்னுமிடம் தோன்ற மகிழ்ச்சியுடையவனாய்,
‘பல காலம் எதிர்சூழல் புக்குத் திரிந்த பொருளை ஒருபடியாக அடைந்தோமே!’ 1இவர்தாம்
இனி நம்மை விடின் செய்வது என்?’ என்று 2ஐயங்கொண்டு, அவன் அலமாக்கிற படியைக்
கண்டு, ‘நீ இங்ஙனம் படவேண்டா’ என்று அவன் ஐயத்தை நீக்கி, அவனை உளன் ஆக்குகிறார்.
3‘விதேக குலத்தில் பிறந்த சீதாய்! சித்திரகூட மலையில் என்னோடுகூட இன்பத்தினை
அனுபவிக்கிறாயா?’ என்றாற்போலே ஆயிற்று இதில் சுவையும்; 4‘மைதிலி, உன்னை அறிந்தாயே
நம்மை அறிந்தாயே, கலக்கிற தேசம் அறிந்தாயே! என்கிறார் என்றபடி.
166
வைகுந்தா! மணிவண்ணனே!
எம்பொல்லாத்
திருக்குறளா! என்னுள்
மன்னி
வைகும் வைகல்தோறும்
அமுதாய வான்ஏறே!
செய்குந்தா வரும்தீமை
உன்அடியார்க் குத்தீர்த்து
அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா! உன்னைநான்
பிடித்தேன்கொள் சிக்கெனவே.
_____________________________________________________________
1. ‘அல் ஆவியுள் கலந்த’ என்றும்,
‘என் முடிவு காணாதே’ என்றும் இவர் கூறினார்;
ஆதலால், ‘வளவேழுலகு’, ‘தலை எடுத்து’ என்னும்
வாக்கியங்களைக் கொணர்ந்து
‘இவர்தாம்’ என்று தொடங்கும் வாக்கியத்திற்கு முன்னே கூட்டிப்
பொருள் காண்க.
2. ஆழ்வார் பக்கல் இறைவன்,
ஐயங்கொள்ளக் காரணம் இரண்டு:
‘மகிழ்ச்சியுடையவனாய் ஐயங்கொண்டு’
என்றதனால், கலவியால் உண்டான பிரீதி ஒன்று;
‘அல்லாவியுள் கலந்த’ என்றும், ‘என் முடிவு காணாதே’
என்றும் கூறியதனால் ஆழ்வார்,
தம்மைத்தாழ்வாக நினைக்கும் நினைவு ஒன்று. ‘உன்னை நான் பிடித்தேன்
கொள்
சிக்கெனவே’ என்றும், ‘உன்னை எங்ஙனம் விடுகேன்?’ என்றும் வருகிற
பாசுரப்பகுதிகளால்
இறைவனுடைய ஐயத்தை நீக்கி, அவனை உளனாக்குகிறபடியைக்
காணலாம்.
3. ஸ்ரீராமா. அயோத். 94 :
18 சம்ஸ்லேஷ ரசாதிசயத்துக்கும், அத்தாலே
ஐயங்கொண்டதற்கும் மேற்கோள், ‘விதேககுலத்தில்’
என்று தொடங்கும் பொருளையுடைய
சுலோகம். ரமியாநிற்கச்செய்தே ‘ரமஸேகச்சித்’ என்கையாலே,
நீர் வாய்ப்பும் நிழல்
வாய்ப்புமான சித்திரகூட பரிசரத்தில் அழகையும், தங்கள் சேர்த்தியழகையும்
கண்டு, ‘இது
தொங்கப் புகுகிறதோ!’ என்று ஐயங்கொண்டது தோன்றுகிறது. அப்படிப் பெருமாள்
ஐயங்கொண்டது
போன்று, இங்கும், ஆழ்வார் விஷயத்தில் இறைவனுக்கும் ஐயம்
உண்டாயிற்று என்றபடி.
4. மேற்கொள் சுலோகத்தின்
கருத்து, ‘மைதிலி’ என்று தொடங்கும் வாக்கியம்.
|