பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

ஆறாந்திருவாய்மொழி - பா. 1

147

வைகும் வைகல்தோறும் அமுதாய - 1கழிகிற காலந்தோறும் எனக்கு முன்பு 2இல்லாத அமிர்தத்தைப் போன்று இனியன் ஆனான். வான் ஏறே-நித்தியசூரிகளோடே கலந்து அவர்களைத் தோற்பித்து மேனாணித்து இருக்குமாறு போலே ஆயிற்று, இவரோடே கலந்து இவரைத் தோற்பித்து இருந்த இருப்பு. பின்பும் அவன் ஏற்றமே விஞ்சி இருத்தலின், ‘ஏறு’ என்கிறார் எனலுமாம்.

     இனி, தம்முடைய அனுபவ விரோதிகளைப் போக்கினபடி சொல்லுகிறார் மேல்: செய் குந்தா வரும் தீமை - செய்யப்பட்டுத் தப்பாவாய் இருக்குந்தீமை. இனி, ‘செய்கும் தா அருந்தீமை’ எனப் பிரித்துச் செய்யப்பட்டுக் கடக்க அரிதான தீமை எனப்பொருள் கூறலுமாம். உன் அடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய் குந்தா - உன் பக்கலிலே 3நிக்ஷிப்தபரராய் இருப்பார்க்கு வாராதபடி நீக்கி, அசுரத்தன்மையுடையவர்கள் மேலே போகடும்படியான சுத்தியையுடையவனே! குந்தம் - குருந்தம் என்ற சொல்லின் விகாரம்; அது ஆகுபெயராய் அதன் மலருக்கு ஆயிற்று; அதன் மலர் வெளுத்து இருக்குமாதலின், அவ்வழியாலே பரிசுத்தத்தை நினைக்கிறது. இனி, ‘குந்தன்’ என்பதனை இறைவனுடைய திருபெயர்களில் ஒன்றாகக் கோடலும் அமையும், 4‘குமுத, குந்தா, குந்த’ என வருதல் காண்க.

 

     இதனால், முன் பிராதிகூல்யம் பண்ணினவர்கள் அனுகூலித்து நாலடி வர நின்றவாறே, பின்னர் அவர்கள் பகைவர்கள் மேலே போகடுவான் என்பதனைத் தெரிவித்தபடி. கடலுக்குத் தொடுத்த அம்பை, அவன் முகங்காட்டினவாறே மருகாந்தாரத்தில் அசுரர்கள் மேலே தொடுத்தமையை 5ஸ்ரீராமாயத்தால் உணர்க. அங்ஙனம் ஒரு போக்கடி கண்டிலனாகில், 6‘பகதத்தனால் விடப்பட்டதும் எல்லாப் பொருள்களையும் அழிக்கக் கூடியதுமான அந்தச் சத்தி

_____________________________________________________________

1. ‘வைகல் நாளும் வைகின்றே’ ( சிந். 156.) என்ற இடத்து ‘நாள் தோறும் நாள்கள் கழியாநின்றன’ என்று பொருள்
  கூறினர் நச்சினார்க்கினியர். வைகல் - கழிதல்.

2. இவ்விடத்து 158 ஆம் பாசுரம் நினைவு கூர்க.

3. நிக்ஷிப்தபரர் - பாரத்தை இறைவன் மேல் போகட்ட அடயாந்கள்.

4. சஹஸ்ரநாமம்.

5. இச்சரிதையைக் கம்பராமாயணம் உயுத்தகாண்டத்தில் வருணனை வழி வேண்டுபடலத்தால் உணரலாகும்.

6. பாரதம்.