New Page 1
|
146 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
சொல்லுகிறார். 1இதனால்,
‘நித்திய விபூதியிலுள்ள இறைவன் தம்முடனே வந்து கலந்தான் என்று மகிழ்கின்றார்’ என்னுமிடம்
தோன்றுகிறது. ‘ஆயின், இப்பொழுது திருப்பெயர்களை அடுக்கிக் கூறுவதற்குக் காரணம் என்னை?’ எனின்,
போகம் 2உத்கூலமானால் ஒருவர்க்கு ஒருவர் பெயரைச் சொல்லிக் கொண்டு அதனால் தரிப்பது
என்பது ஒன்று உண்டு அன்றே? மணிவண்ணனே - நீல ரத்தினம் போன்று குளிர்ந்த வடிவுடையவனே!
3அணைத்த போது உண்டான பரிசத்தால் திமிர்த்துச் சொல்லுகிறார். என் பொல்லாத் திருக்குறளா
- என்னுடைய அழகிய வாமனனே! ‘அழகிது’ என்னில், நாட்டுக்கு ஒப்பாம் என்று கருதி அழகில்
4விஸஜாதீயதையைச் சொல்லுகிறார் ‘பொல்லா’ என்று. இனி, ‘கண்ணெச்சில் வாராமைக்குக்
கரி பூசுகிறார்’ எனலுமாம். இதனால், 5மஹாபலி பக்கலிலே இரப்பாளனாய் நின்றது
போன்று தம்மைப் பெறுகைக்குச் சிறாம்பி இரப்பாளானாய் நின்ற நிலையைத் தெரிவித்தபடி.
‘வைகுந்தா’ என்று
மேன்மை சொல்லிற்று; ‘மணி வண்ணனே’ என்று வடிவழகு சொல்லிற்று; ‘என் பொல்லாத் திருக்குறளா’
என்று சௌலப்யம் சொல்லிற்று; இம்மூன்றும் கூடினதாயிற்றுப் பரத்துவமாவது.6
என்னுள் மன்னி -
என்னுடைய மனத்திலே வந்து நித்திய வாசம் செய்து. இந்திரன் இராஜ்ய லாபம் பெற்றுப்
போனான்; மஹாபலி கொடையின் லாபம் பெற்றுப் போனான்; அவ்வடிவழகு ஊற்றிருந்தது இவர் நெஞ்சிலே
ஆதலின், ‘குறளா என்னுள் மன்ளி’ என்கிறார்.
_____________________________________________________________
1. ‘இதனால்’ - ‘வைகுந்தா’
என்ற இதனால்.
2. உத்கூலமாதல் - கரை
புரளுதல்.
3. சம்ஸ்லேஷ சமயத்தில்
‘மணி வண்ணனே’ என்றதற்கு பாவம், ‘அணைத்த போது’ என்று தொடங்கும் வாக்கியம்.
4. விஸஜாதீயதை - வேறுபட்ட
சாதியின் தன்மை.
5. ‘குறளா’ என்பதற்கு பாவம்,
‘மஹாபலி பக்கலிலே’ என்று தொடங்கும் வாக்கியம். சிறாம்பி - சங்கோசித்து.
6. இம்மூன்றையும் இங்குச்
சேர்த்துக் கூறியது, விடப்போகாமைக்குக் காரணத்தைத் தெரிவித்தபடி.
|