பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

ஆறாந்திருவாய்மொழி - பா. 7

161

    வி-கு : ‘முழு’ என்பது, எஞ்சாமையைக் காட்ட வந்தது; ‘முழுதுஎன் கிளவு எஞ்சாப் பொருட்டே’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார், உண்டான் - வினையாலணையும் பெயர். ‘எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப், பண்புடை மக்கட் பெறின்’ என்ற திருக்குறளுக்கு விரிவுரையாகவும் உதாரணமாகவும் அமைந்தது இப்பாசுரம் எனலாம். ‘எமர் துறந்து சேர்தல் மாறினர்’ என முடிக்

    ஈடு : ஏழாம் பாட்டு. 1‘என் அளவில் செய்த திருவருள் என்னுடைய சம்பந்தி சம்பந்திகள் அளவும் சென்றது காண்மின்’ என்கிறார்.

    முடியாதது. என் எனக்கேல் இனி - எனக்காகில் இனி முடியாதது உண்டோ? ‘எனக்கு இனி 2அநவாப்தமாய் இருப்பது ஒன்று உண்டோ?’ என்றபடி. ‘நீர் இது என் கொண்டு சொல்லுகிறீர்?’ என்ன, முழு ஏழ்உலகும் உண்டான் உகந்து வந்து அடியேன் உள் புகுந்தான் - பிரளய ஆபத்திலே அகப்பட்ட பூமி, தன் வயிற்றில் புகாத போது படும் பாடு அடங்க, தான் என் பக்கல் புகாத போது படுவானாய் வந்து புகுந்தான்; எனக்கு இனி முடியாதது உண்டோ? சம்பந்தத்தைப் பார்த்துப் புகுந்தான் என்பார், ‘அடியேன் உள் புகுந்தான்’ என்கிறார். ஒரு நீராகப் கலந்தான் என்பார், ‘உள் புகுந்தான்’ என்கிறார். தன் பக்கல் உலகம் புக்கது போன்று அன்றி, மகிழ்ந்து புக்கானாதலின், ‘உகந்து புகுந்தான்’ என்கிறார். ஆயின், இவனுக்கும் உலகத்துக்கும் செல்லாமை ஒக்கும், உவப்பே இவ் விஷயத்தில் 3தன் ஏற்றம். இனி அகல்வானும் அல்லன் - அந்தப் பூமிக்குப் பிரளயம் நீங்கினவாறே அகலவேண்டும்; இவனுக்கு அதுவும் இல்லை. ‘அகல ஒண்ணாமைக்குக் காரணம் என்?’ எனின், சேதநரைப் போலே பாவத்தாலே அகன்று ஒரு புண்ணியத்தாலே கிட்டுமது இல்லையே இவனுக்கு? ஆதலின், ‘அகல்வானும் அல்லன்’ என்கிறார். ஆக, ‘முதலிலே பிரிவைப் பற்றிப் பேசவும் உடன் படுகின்றிலன்’ என்றபடி.

____________________________________________________________

1. ‘எமர் கீழ்மேல் எழுபிறப்பும் விடியா வெந்நரகத்துச் சேர்தல் என்றும் மாறினர்’ என்ற
  பதங்களை நோக்கி அவதாரிகை அருளிச் செய்கிறார்.

2. அநவாப்தமாய் - முடியப்பெறாததாய்.

3. ‘உவப்பே இவ்விஷயத்தில் தன்னேற்றம்’ என்றது. ஆழ்வார் விஷயத்தில்
  இறைவனுக்குண்டான உவப்பே இறைவனுக்கு ஏற்றம் என்றபடி. அன்றி, ‘இவ்விஷயத்தில்’
  என்றதனை ஈசுவரனாகக் கோடலுமாம்.