New Page 1
|
162 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
‘உம்மை அவன் இப்படி
விரும்பினான் ஆகில், பனை நிழல் போலே உம்மை நோக்கிக் கொண்டுவிட அமையுமோ?’ என்ன,
செடியார் நோய்கள் எல்லாம் துரந்து - பாவங்களாலே நிறைந்த துக்கங்களை வாசனையோடே ஓட்டி.
செடி - பாவம். இனி, ‘செடியார் நோய்’ என்பதற்கு, ‘தூறு மண்டின நோய்கள்’ என்று பொருள்
கூறலுமாம். செடி - தூறு. விஷயப் பிராவண்யத்தால் வந்த நோய், தமது தாழ்வினை நினைத்தலால் வந்த
நோய், பகவானுடைய அனுபவத்தைப் பிரிந்த பிரிவால் வந்த நோய் ஆகிய இவற்றை எல்லாம் நினைத்து,
‘நோய்கள் எல்லாம்’ என்கிறார். ‘ஆயின், 1‘உள்ள நோய்கள் எல்லாம்
துரந்து’ என்ற இடத்திலும் கூறிற்றிலரோ இவற்றை?’ என்னில், அங்குக் கூறியது, தம் அளவு. இங்குக்
கூறுவது, தம் சம்பந்தி சம்பந்திகளுடைய விஷயம். ‘இப்படி இவர்கள் ஒட்டியது எதனாலே?’ என்னில்,
எமர் - வேறு ஒன்றால் அன்று; என்னுடைய சம்பந்தமே காரணமாக. ‘சம்பந்தம் எவ்வளவு?’ என்னில்,
கீழ் மேல் எழு பிறப்பும் - கீழ் எழுபடி காலும் மேல் எழுபடி காலும் 2தம்முடன் எழுபடி
காலும் ஆக இருபத்தொருபடி கால்.
விடியா வெம்நரகத்து
- ஒருநாள் வரையிலே பாவங்கள் குறைந்தவாறே விடியும் தன்மையையுடையது எமன் தண்டம்; 3இது
விடியாத நரகம் ஆதலின், ‘விடியா நரகம்’ என்கிறார். ‘நரகம்’ என்று புத்தி பிறக்கும்
அந்நரகத்தில், 4தண்மை தோற்றாத நரகம் இது ஆதலின், ‘வெம்நரகம்’ என்கிறார்.
என்றும் சேர்தல்மாறினர் - என்றும் கிட்டக்கூடிய தண்மை தவிர்ந்தனர். ‘நானும் பிரார்த்திக்க
வேண்டிற்று இல்லை; அவனும் நினைப்பிட வேண்டிற்று இல்லை’ என்பார், ‘மாறினர்’ என்று
5அவர்கள் வினையாக அருளிச்செய்கின்றார். ‘எதனாலே?’ என்னில், ‘என் பக்கல்
அவன் பண்ணின பக்ஷபாத ராஜகுலத்தாலே மாறிக்கொண்டு நின்றார்கள்’ என்றபடி.
(7)
_____________________________________________________________
1. திருவாய்மொழி, 2. 6 :
4.
2. ‘தம்முடன் எழுபடி கால்’
என்றது, தமக்கு முன்னே மூன்று பேரும், பின்னே மூன்று
பேரும், தாமுமாக எழுவர். இருபத்தொருபடி கால்
- இருபத்தொரு தலைமுறை.
3. இது - சம்சாரம்.
4. தண்மை - தாழ்வு
5. மேற்பாசுரத்தில் ‘அரிந்தனன்
யான்’ என்றதன் வியாகியாக்னத்தை ஈண்டு ஒப்பு நோக்குக.
|