ஈ
170 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
ஈடு :
முடிவில், ‘இத்திருவாய்மொழியினைக் கற்க வல்லவர்கள் யாரேனுமாகவுமாம்; அவர்களுக்குக் குலம்
சரணம் கோத்திரம் முதலானவைகள் பிரயோஜனம் அற்றவைகள்; இத்தன்மையாலே அவர்கள் பகவானுக்கு
உரிமைப்பட்டவர்கள்,’ என்கிறார்.
கண்ணி தண் அம்
துழாய் முடிக் கமலம் தடம் பெரும் கண்ணனை - இப்போதாயிற்று மாலை செவ்வி பெற்றதும், முடி நன்கு
தரித்ததும், திருக்கண்கள் மலர்ச்சி பெற்றதும். புகழ் நண்ணி - இறைவன், தம் பக்கல் செய்த
காதலாகிய குணத்திலே மூழ்கி. தென்குருகூர்ச் சடகோபன் மாறன் - ஒன்று திருப்பெயர்; ஒன்று
பகைவர் கூட்டத்துக்கு யமனாக உள்ளவர் என்பதனைக் காட்ட வந்தது. எண்ணில் சோர்வு இல் அந்தாதி
ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து - இறைவன் தம் பக்கல் பண்ணின வியாமோகத்தின் மிகுதியை நினைத்து,
அவற்றில் ஒன்றும் குறையாமல் அருளிச்செய்த ஆயிரத்தில் இப் பத்து. இசையொடும் பண்ணில் பாட
வல்லார்- இதில் ஆசையாலே இசையோடும் பண்ணோடும் பாட வல்லவர்கள். பண்ணாவது, கானம். இசையாவது,
குருத்துவம் லகுத்துவம் முதலானவைகள் தம்மிலே நெகிழ்ந்து பொருந்துகை. 1‘தொனியாலும்
திறத்தாலும்’ என்றபடி. அவர் கேசவன் தமரே - அவர்கள் யாரேனுமாகவுமாம், 2குலம்
சரணம்
_____________________________________________________________
1. தொனி என்றது, பண். திறம்
என்றது, இசை.
2. ‘விப்ரர்க்குக் கோத்ர
சூத்ர சரண கூடஸ்தர், பராசர பாரா சர்ய போதாயநாதிகள்;
(பிரபந்நர்கட்கு) பிரபந்ந
ஜந கூடஸ்தர் பராங்குச பரகால யதிவராதிகள்’ ‘கோத்ரமாவது,
அபத்ய சந்ததி; அந்த கோத்ரந்தான்
அநேகமாய்த் தத்தத் கூடஸ்தரான வசிஷ்ட காஸ்யப
பரத்வாஜ வத்ஸப் பிரப்ருதிகள் பலரும் உண்டாகையாலே
‘பராசராதிகள்’ என்கிறது. சூத்ர
கூடஸத்தர், போதாயநாதிகள்; சூத்ரமாவது, கர்ம அநுஷ்டாந பிரதிபாதகமான
கல்பம்:
அது தானும் பலவாய்த் தத்தத் கர்த்தாக்களான ஆபஸ்தம்ப ஆஸ்வலாயநாதிகளும்
உண்டாகையாலே,
‘போதாயநாதிகள்’ என்கிறது. சரணங்களாவன, வேதசாகைகள்; சர்வ
சாகைகளுக்கும் பிரதான பிரவர்த்தகன்,
பாராசர்யனாயிருக்கச்செய்தேயும், பின்பு தத்தத்
சாகைகளுக்குத் தனித்தனி பிரவர்த்தகரான கடக
கலாப கண்வாதிகளும்
உண்டாகையாலே‘பாராசர்யாதிகள்’ என்கிறது’ எனவரும் ஆசார்ய ஹ்ருதய சூத்திரமும்,
அதன் வியாக்கியானமும் (பிரதமப் பிரஹரணம். சூத். 35) ஈண்டு உணர்தல் தகும்.
‘சாத்திரம் மறைதெரி
முனிவர் தன்மையிற்
காத்திரம் மாறிஅக்
காவல் வேந்தரும்
கோத்திரம் சூத்திரம்
குடிஉரைத்துளார்
வேத்திர கீயமா நகரின
மேயினார்.’
(வேத்திரகீயச்சருக் 33.)
என்றார் வில்லிபுத்தூராழ்வார்.
|