பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

ஆறாந்திருவாய்மொழி - பா. 11

171

கோத்திரம் முதலானவைகள் பயன் அற்றவைகள்; 1‘விண்ணப்பஞ் செய்வார்கள்’ என்னுமாறு போன்று, இத்தன்மையாலே அவர்கள் பகவானுக்கு உரிமைப்பட்டவர்கள்.

(11)

    முதற்பாட்டில், எம்பெருமான் ‘இவர் நம்மை விடின் செய்வது என்?’ என்று கொண்ட ஐயத்தைப் போக்கினார்; இரண்டாம் பாட்டில், அது போன பின்னர் அவனுக்கு உண்டான புதுக்கணிப்பைச் சொன்னார்; மூன்றாம் பாட்டில், தமக்கு அவன் செய்த கொடையினைச் சொல்லி ஈடுபட்டார்; நான்காம் பாட்டில், ‘அவன் உமக்குப் பண்ணின உதவி எது?’ என்ன, ‘இதர விஷய வைராக்கியம்’ என்றார்; ஐந்தாம் பாட்டில், இதர விஷயவைராக்கியம் முன்னாக ஆத்துமா உள்ள வரையிலும் உள்ள அடிமையிலே அதிகரித்த நான் இனி ஒருநாளும் விடேன்’ என்றார்; ஆறாம் பாட்டில, ‘அடியார்கட்கு உதவுவாய் ஆன பின்பு எனக்கு ஒரு குறை உண்டோ?’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘என்னுடைய சம்பந்தி சம்பந்திகளுக்கும் ஒரு முறை இல்லை’ என்றார்; எட்டாம் பாட்டில், இதற்குத் தாம் செய்த உபாயம் இன்னது என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘இவர் அகவாய் அறிய வேண்டும்’ என்று ஓரடி பேர நிற்க, ‘இனிப்போக ஒண்ணாது’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘நாம் போகாதொழிகிறோம்; நீர்தாம் போகாதொழிய வேண்டுமே?’ என்ன, ‘முக்காலத்திலும் எல்லா விதமான பந்துவுமான உன்னை விடக் காரணம் இல்லை’ என்றார்; முடிவில், இது கற்றார்கட்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        வைகுந்தன் வந்து கலந்ததற்பின் வாழ்மாறன்
        செய்கின்ற நைச்சியத்தைச் சிந்தித்து - நைகின்ற
        தன்மைதனைக் கண்டுஉன்னைத் தான்விடேன்
                 என்றுரைக்க
        வன்மைஅடைந் தான்கேச வன்.
                      

(16)

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

_____________________________________________________________

1. விண்ணப்பஞ்செய்வார் - அரையர்