ஏழ
172 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
ஏழாந்திருவாய்மொழி
-‘கேசவன்தமர்’
முன்னுரை
ஈடு :
1‘ஆடி
ஆடி’ என்ற திருவாய்மொழியில் ‘வாடி வாடும்’ என்கையாலே, ஒரு நீர்ச்சாவியாய் வாடினபடி
சொல்லிற்று; அந்த நீர்ச்சாவியானது தீரக்காரார் கருமுகில் கலந்து மழை பெய்தபடி சொல்லிற்று
‘அந்தாமத்தன்பு’ என்ற திருவாய்மொழியில்; அப்படி மழை பெய்த படியாலே, ‘ஈறு இல் இன்பத்து இரு
வெள்ளம் யான் மூழ்கினன்’ என்று வெள்ளம் இட்டுப் பெருகினபடி சொல்லிற்று ‘வைகுந்தா மணிவண்ணனே’
என்ற திருவாய்மொழியில்; ‘எமர் கீழ் மேல் எழுபிறப்பும் மா சதிர் இது பெற்று’ என்கையாலே,
அவ் வெள்ளம் இருகரையும் புரண்டபடி சொல்லுகிறது ‘கேசவன் தமர்’ என்னும் இத்திருவாய்மொழியில்.
இனி, இவர் ‘ஆடி ஆடி’ என்ற திருவாய்மொழியில் பட்ட துன்பம் தீர வந்து கலந்தபடி சொல்லிற்று
‘அந்தாமத்தன்பு’ என்ற திருவாய்மொழியில்; அக்கலவியால் பிறந்த பிரீதி அவனது ஆனபடி
சொல்லிற்று ‘வைகுந்தா மணிவண்ணனே’ என்ற திருவாய்மொழியில்; அந்தப் பிரீதிதான் ஆழ்வார்
ஒருவர் அளவிலும் அன்றிக்கே, 2தம்மோடு தொடர்ந்து வருகின்ற சம்பந்தம் உடையாரளவும்
வெள்ளம் இட்டுப் பெருகினபடியைச் சொல்லுகிறது இத்திருவாய்மொழியில் என்று கூறலுமாம்.
3சர்வேஸ்வரன்,
ஆழ்வாரோடே வந்து கலந்த கலவியால் பிறந்த பிரீதி தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே, தம்மோடு
பரம்பரையாகச்
_____________________________________________________________
1. மேல் திருவாய்மொழிக்கும்
இத்திருவாய்மொழிக்கும் இரு வகையில் இயைபு
அருளிச்செய்கிறார். ‘ஆடியாடி’ என்று தொடங்கி.
நீர்ச்சாவி - நீர் இல்லாத பயிர்.
‘அல்லாவியுள் கலந்த, காரார் கருமுகில் போல் என் அம்மான்’
என்றதனை நோக்கிக்
‘காரார் கருமுகில் கலந்து மழை பெய்தபடி சொல்லிற்று’ என்கிறார். ‘மாறி
மாறிப் பல
பிறப்பும்’ என்ற பாசுரத்தை நோக்கி ‘ஈறிலின்பத் திருவெள்ளம். யான் மூழ்கினன்
என்று
வெள்ளமிட்டுப் பெருகினபடி சொல்லிற்று’ என்றார். ‘இருகரையும்’ என்றது, கீழ் எழு
பிறப்பும்
ஒரு கரை; மேல் எழுபிறப்பும் ஒரு கரை.
2. இத்திருப்பதிகத்தின்
முதல் பாசுரத்தை நோக்குக.
3. இத்திருப்பதிகத்தில்
கூறப்படும் பொருளைச் சுருக்கி அருளிச் செய்கிறார் ‘சர்வேஸ்வரன்’
என்று தொடங்கி.
|