பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

174

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

இருந்தீராகில், 1குடல் தொடக்கு உடையாரிலே ஒருவன் செய்யுமித்தனை அன்றோ? நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய, நீர் கட்ட நில்லீர்’ என்றார் பெருமாள். இங்கு ஸ்ரீவிபீஷணாழ்வான் பக்கல் இருந்த அன்பு இராவணன் அளவும் சென்றது. 2‘மகாராஜர்க்குப் பகைவன்’ என்று வாலியைக் கொன்ற பின்னர், மகாராஜர் கண்ண நீர் பொறுக்கமாட்டாமல் 3‘விடப்பட்ட கண்ணநீரை உடையவர் ஆனார்’ என்கிறபடியே, தாமும் கண்ணநீர் விழ விட்டார். 4‘மங்கள குணமுள்ள மாலாகாரரே! உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய வமிசத்தில் பிறந்தவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகப்போகிறது!’ என்கிறபடியே, ஸ்ரீமாலாகாரர் பக்கல் அங்கீகாரம் அவன் சந்தானத்தளவும் சென்றது. ஸ்ரீகண்டாகர்ணன் பக்கல் பண்ணின அங்கீகாரம் அவன் தம்பி அளவும் சென்று, ‘நீ அவனுக்கு நல்லையாகில் 5‘அவன் முன்னாகப் போ’ என்று அருளிச்செய்தான். ஆக, இன்னோர் அன்ன சரிதைகளால் சம்பந்தி சம்பந்திகளையும் அங்கீகரித்தல் உணர்தல் தகும்.

    6எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால் ‘ஸ்ரீவைஷ்ணவன் ஆனேன் என்கிறார்’ என்பராம். ஸ்ரீ வைஷ்ணவத்வ அடையாளம் அன்றோ திருத்து வாதச நாமங்கள்? நெடுமாற்கு அடிமை, ஆழ்வாருடைய நெடுமாற்கு அடிமையும், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமையும் என இரு வகைப்படும். அவற்றுள், எம்பெருமானுடைய நெடுமாற்கு அடிமை இத்திருவாய்மொழி.

_____________________________________________________________

1. ஸ்ரீவிபீஷ்ணாழ்வானைப் பெருமாள் தமக்கு உடன் பிறந்தவனாகக் கொண்டார்
  ஆகையாலே, அவனுக்குத் தமையனான இராவணனும் உடன் பிறந்தவன் ஆவன்;
  ஆதலின், தம்மைக் ‘குடல் தொடக்குடையாரிலே ஒருவன்’ என்கிறார். ஒருவன் -
  ஸ்ரீராமபிரான். ஸ்ரீராமபிரானைப் ‘பெருமாள்’ என்றும், இலக்குமணணை
  ‘இளையபெருமாள்’ என்றும் கூறுதல் வழக்கு.

2. சுக்கிரீவனை ‘மஹாராஜர்’ என்பது வைணவப் பெருமக்கள் வழக்கு.

3. ஸ்ரீராமா. கிஷ்கிந். 23 : 24.

4. ஸ்ரீவிஷ்ணு புரா 5. 19 : 27.

5. ‘அவன் முன்னாகப் போ’ என்றது, ‘அவனை முன்னிட்டுக் கொண்டுபோ’ என்றபடி.

6. குண சேஷ்டித வாசக நாமாந்தரங்கள் இருக்க, திருத்துவாதச நாமங்களாலே
  அனுபவிப்பதற்கு பாவம், ‘எம்பார் இத்திருவாய்மொழி’ என்று தொடங்கும் வாக்கியம்.
  துவாதசம் - பன்னிரண்டு. சம்பந்தி சம்பந்திகள் அளவும் அங்கீகரிக்கைக்கு ரசோக்தி,
  ‘நெடுமாற்கடிமை, ஆழ்வாருடைய’ என்று தொடங்கும் வாக்கியம். ‘நெடுமாற்கடிமை’
  என்றது, அடியார்கள் அளவும் செல்லும் பிரேமத்தை. இந்தப் பிரேமம் ஆழ்வார்க்குச்
  சொரூபத்தோடு கூடியது; எம்பெருமானுக்கு வேட்கையால் உண்டாயது.