ம
204 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
மாலை ஆயிரத்துள் பன்னிரு
நாமத்தைப் பற்றிய பண்ணோடு கூடிய இவை பன்னிரண்டு பாசுரங்களுள் அண்ணலுடைய திருவடிகளில் சேர்ப்பிக்கும்.
வி-கு :
இத்திருவாய்மொழியில் வந்துள்ள பன்னிரண்டு திருப்பெயர்களும் ‘துவாதச மந்திரம்’ எனப்படும்.
‘பன்னிருநாமம்’ என்றதூஉம் அது. நான்காம் அடியிலுள்ள ‘பண்’ என்பது, இசை.
ஈடு :
முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றவர்களை இத்திருவாய்மொழிதானே எம்பெருமான் திருவடிகளில்
சேர்த்து விடும்,’ என்கிறார்.
வண்ணம் மா மணிச்
சோதியை - அழகிய நிறத்தையுடைத்தாய்ப் பெருவிலையதான இரத்தினம் போலே இருக்கிற விக்கிரகத்தை
உடையவனை. 2‘நீலரத்தினம் போன்ற வடிவில் ஒளியை உடையவன்’ எனலுமாம். வண்ணம் -
நிறம். மா-கருமை. இவ்வடிவழகினைக் கொள்ளை கொள்ளும் போக்தாக்களைச் சொல்லுகிறார் மேல்:
அமரர் தலைமகனை - ஒரு நாடாக அனுபவித்தாலும் தன் அழகினைப் பரிச்சேதிக்க ஒண்ணாதிருக்கின்றவனை.
கண்ணனை - அவர்களே அனுபவித்துப் போகாமல் இங்குள்ளாரும் அனுபவிக்கும்படி கிருஷ்ணனாய் வந்து
அவதரித்தவனை. நெடுமாலை - ஒருவனை அங்கீகரித்தால் அவன் அளவில் முடிவு பெறாத வியாமோகத்தையுடையவனை.
தென்குருகூர்ச் சடகோபன் பண்ணிய - வேதம் போன்று பிறப்பிலி அன்று; ‘புருஷனால் செய்யப்படாதது’
என்னுமதிலும் வீறு உண்டாய் இருக்கிறதாயிற்று இயற்றினார் சிறப்பாலே. பண்ணில் ஆயிரத்துள்
இவை பன்னிரண்டும் - இவை பண்ணிலேயாயிற்று நடந்தது. பன்னிரு நாமப் பாட்டு - வைஷ்ணவத்திற்கு
அடையாளமான திருநாமங்களை வைத்துப் பாடினவை. ‘இது செய்வது என்?’ எனில், அண்ணல் தாள் அணைவிக்கும்
- சர்வேஸ்வரன் திருவடிகளோடே சேர்த்துவிடும்; ‘இத்திருவாய்மொழியின் சம்பந்தந்தானே கேசவன்
தமராக்கிவிடும்,‘ என்பதாம்.
(13)
_____________________________________________________________
1. ‘பன்னிரு நாமப்
பாட்டு அண்ணல் தாள் அணைவிக்கும்’ என்ற பதங்களைக் கடாஷித்து
அவதாரிகை.
2. ‘வண்ண மாமணிச் சோதியை’
என்பதற்கு, அருளிச்செய்யும் பொருள் இரண்டனுள்
முதற்பொருளில், வண்ணம் - அழகிய நிறம். மா -
பெருமை. சோதி - விக்கிரகம்.
இரண்டாவது பொருளில், ‘மா மணி வண்ணச் சோதி’ என மாற்றுக.
வண்ணம் -
விக்கிரகம்; ஆகுபெயர்.
|