1அத
எட்டாந்திருவாய்மொழி - முன்னுரை |
207 |
1அத்வேஷத்தைப்
பிறப்பித்து ஆபிமுக்கியத்தைப் பிறப்பித்து ருசியை உண்டாக்கி, 2இவர் விடிலும் தான்
விடாமல் விரும்பி, இதுதான் இவர்தம் அளவிலே அன்றி இவர்தம்மோடு சம்பந்தமுடையார் அளவும் இப்படிப்
பெருகிக் கரை புரளும்படி செய்கிற தன்மையை அநுசந்தித்து, ‘சர்வேஸ்வரன் தன்மை இதுவான பின்பு நாம்
பெற்ற பேறு எல்லாரும் பெறும்படி செய்வோம்’ என்று, சம்சாரிகளை அடையப் பார்த்து, அவர்களுக்கு
‘மோஷத்தைக் கொடுப்பவன்’என்னுமிடத்தை அருளிச்செய்கிறார். 3இவர், தாம்
பெற்றதாய்ப் பிறர்க்கு உபதேசிக்கிற பேறுதான் பிராட்டி, திருவடி, திருவனந்தாழ்வான் இவர்களைப்
பரிகரமாக உடையதாய், எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் தன் முயற்சியால் அடைவதற்கு அரியதாய்,
அவனாலே பெறப்பார்ப்பார்க்கு வருத்தம் அறப் பெறக்கூடியதாய், சம்சாரத்தில் இன்பங்கள்
போலே நிலையற்றதாய் இருக்கை
____________________________________________________________
1. ‘அத்வேஷத்தைப் பிறப்பித்து’
என்றது, ‘யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு
செய்யும்’ என்றும், ‘இசைவித்து என்னை’
என்றும் வருகின்ற பாசுரப் பகுதிகளை நோக்கி.
அத்வேஷம் - துவேஷமின்மை. ‘ஆபிமுக்கியத்தைப்
பிறப்பித்து’ என்றது, ‘மயர்வற
மதிநல மருளினன்’ என்றதனை. அன்றியே, இவ்விரண்டையும் ‘என்னைத்
தீமனம்
கொடுத்தாய்’, ‘மருவித்தொழும் மனமே தந்தாய்’ என்பனவற்றைத் திருவுள்ளத்தே
கொண்டு
அருளிச்செய்கிறார் எனலுமாம். ஆபிமுக்கியம் - எதிர்முகமாதல்.
‘ருசியையுண்டாக்கி’ என்றது,
‘அடிமைக்கண் அன்பு செய்வித்து’, ‘நின்னலால்
இலேன்காண்’ என்பனவற்றை நோக்கி.
2. ‘இவர் விடிலும் தான்
விடாமல் விரும்பி’ என்றது, ‘யானொட்டி என்னுள் இருத்துவம்
என்றிலன்’ என்ற பாசுரத்தை நோக்கி.
‘இது தான்’ என்றது முதல் ‘கரை புரளும்படி
செய்கின்ற தன்மையை அநுசந்தித்து’ என்றது முடிய, ‘முடியாதது
என் எனக்கேல்’,
‘கேசவன் தமர்’, ‘கோவிந்தன்’ என்னும் பாசுரங்களைத் திருவுள்ளத்தே கொண்டு
அருளிச்செய்கிறார்.
3. இது முதல் இத்திருவாய்மொழியிற்கூறிய
பொருளைச் சுருங்க அருளிச்செய்கிறார்.
‘பரிகரமாக உடையதாய்’ என்றது, பரிகரமாகவுடைய சர்வேஸ்வரனை
விஷயமாக
உடையதாய் என்றபடி. இது, முதல் பாசுரத்திலே நோக்கு. ‘ஆர் காண்பாரே’ என்றதிலே
நோக்காக
‘அடைவதற்கு அரியதாய்’ என்கிறார். ‘வருத்தமறப் பெறக் கூடியதாய்’ என்றது,
‘புணைவன்’ என்றதனை
நோக்கி. ‘நலமந்தமில்லதோர் நாடு’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றிச் ‘சம்சாரத்தில் இன்பங்கள்’
என்று தொடங்கும் வாக்கியத்தை எழுதுகிறார்.
‘விளக்கமின்றி இருத்தலன்றி’ என்றது முதல்,
‘அளவுக்குட்படாததாய்’ என்றது முடிய,
கத்யத்திரைய வாக்கியங்களைத் திருவுள்ளத்தே கொண்டு
அருளிச்செய்கிறார்.
|