எட
206 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
எட்டாந்திருவாய்மொழி
‘அணைவதரவணை’
முன்னுரை
சர்வேஸ்வரன் தம்
பக்கல் செய்த வியாமோகம் தம் ஒருவர் அளவிலும் அன்றிக்கே, தம்மோடு சம்பந்தம் உடையாரளவிலும்
வெள்ளம் இட்டபடியைச் சொன்னார் மேல் திருவாய்மொழியில்; ‘நம்முடைய சம்பந்தமே ஏதுவாக
இறைவன் இப்படி அங்கீகரிப்பவனான பின்பு சம்சாரிகளுக்கும் 1நம்மோடு ஒரு சம்பந்தத்தை
உண்டாக்கி அவன் திருவருளுக்கு விஷயமாக்குவோம்’ என்று, அவர்களுக்கு மோக்ஷப் பரதத்துவத்தை
அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில். இத்திருவாய்மொழி 2‘ஈஸ்வரத்துவம்
சொல்லுகிறது,’ என்று நிர்வஹிப்பாரும் உண்டு. ஆனால், மோக்ஷப் பரத்தத்துவம் சொல்லுகிறது என்று
பட்டர் அருளிச்செய்யும்படி. 3இவைதாம், ஒன்றை ஒன்று விட்டு இரா; ஈஸ்வரன்
ஆவான் மோக்ஷத்தைக் கொடுப்பவனேயாவன்; மோக்ஷத்தைக் கொடுப்பவன் ஆம்போது ஈஸ்வரன் ஆக வேண்டும்.
‘நன்று, இத்திருவாய்மொழியில்
எவ்விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்?’ என்னில், ஆழ்வார்க்கு முதல்முன்னம் சர்வேஸ்வரன்
_____________________________________________________________
1. இவர் உபதேசிக்க அவர்கள்
கேட்பதனால் குரு சிஷ்ய சம்பந்தம் உண்டாதலை நோக்கி,
‘நம்மோடு ஒரு சம்பந்தத்தை உண்டாக்கி’
என்கிறார்.
2. ‘ஈஸ்வரத்துவம்
சொல்லுகிறது என்று நிர்வஹிப்பாரும் உண்டு’ என்றது,
இத்திருவாய்மொழியில் ‘இருவர் அவர்
முதலுந் தானே’ என்றும், ‘தீர்த்தன் உலகளந்த’
என்றும் வருகின்றவைகளை நோக்கி. ஈஸ்வரத்துவம்,
இறைமைத்தன்மை. ‘மோஷப்
பரத்துவத்தைச் சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச்செய்யக் காரணம்,
‘பிறவிக்கடல்
நீந்துவார்க்குப் புணைவன்’ என்ற பகுதியைத் திருவுள்ளம் பற்றி. மேலும், ‘திண்ணன்வீடு’
என்ற திருவாய்மொழியில் ஈஸ்வரத்துவத்தைப் பற்றி அருளிச்செய்துள்ளமையும் ஈண்டு
நினைவுகூர்தல்
தகும்.
3. ‘இவைதாம்’ என்றது, ஈஸ்வரத்துவத்தையும்,
மோக்ஷப்பரதத்துவத்தையும். மோஷத்தைக்
கொடுக்கின்றமையாகிய ஈஸ்வரத்துவத்தை இத்திருவாய்மொழி
கூறுகின்றது என்றபடி.
இவை இரண்டும் முதல் பாசுரத்தால் விளங்கும்.
‘நாறிணர்த் துழாயோன்
நல்கின் அல்லதை
ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்?’
என்பது, பரிபாடல், 15.
15, 16.
|