ஈ
|
226 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
ஈடு :
ஏழாம் பாட்டு. ‘ஒருவன் மேற்கொண்ட ஒழுக்கத்தைக் கொண்டு நிச்சயிக்க வேண்டுமோ? அவனுடைய இஷ்டத்திற்குத்
தகுதியாக எல்லாச் செயல்களுக்கும் விஷயமாய் அன்றோ இவ்வுலகம் இருக்கிறது? இதுவே போராதோ
பரத்துவத்திற்குக் காரணம்?’ என்கிறார்.
கிடந்து -திருப்பாற்கடலிலே
கிடந்தபடியாதல், 1‘கிழக்கு முகமாகப் படுத்தார்’ என்னும்படியாகக் கடற்கரையிலே சாய்ந்தபடியாதல்;
இருந்து - பரமபதத்திலே இருந்தபடியாதல்; 2‘பர்ணசாலையில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீராமர்’
என்கிறபடியே, இருடிகள் ஆஸ்ரமங்களிலே இருந்தபடியாதல்; நின்று - திருமலையிலே நின்ற படியாதல்;
இராவணனைக் கொன்ற பின்னர்க் கையும் வில்லுமாய் இலங்கையிலே நின்றபடியாதல்; 3‘வலிய
வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்கின்ற ஸ்ரீராமனையும் இலக்குமணனையும், தன் கணவனுக்குத் தம்பியான
சுக்கிரீவனையும் நல்ல எண்ணமுள்ள தாரையானவள் கண்டாள்,’ என்கிறபடியே வாலியைக் கொன்று நின்ற
நிலையாதல்; அவர்களுடைய பெண்கள் பக்கலிலே கேட்குமித்தனையே அன்றோ இவனுடைய பரத்துவம்?
4‘பிரகிருதி மண்டலத்திற்கு மேலே இருக்கிற ஸ்ரீவைகுண்டத்தில் இருப்பவர், சங்கு சக்கரம்
கதை இவற்றைத் தரித்திருப்பவர், கொடுக்கிறவர், ஸ்ரீவத்சம் என்னும் மறுவைத் திருமார்விலுடையவர்,
பிரியாமல் இருக்கிற பெரிய பிராட்டியாரையுடையவர், ஒருவராலும் வெல்ல முடியாதவர்,
_____________________________________________________________
1. ஸ்ரீராமா. யுத். 21 : 1.
இப்பொருளையுடைய சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த
பொருள்: ‘பாஹூம்புஜகபோகாபம் -
திருவனந்தாழ்வான் மேலே
சாய்ந்தாற்போலேயாயிற்றுத் திருக்கையை மடித்துச்சாய்ந்தால்
இருக்கும்படி. அரிஸூதந: -
கிடந்த கிடையிலே இலங்கை குடிவாங்க வேண்டும்படி இருக்கை பிரதிஸிஸ்யே
மஹேததே:- ஒரு கடலோடே ஒரு கடல் ஸ்பரிசித்துச் சாய்ந்தாற்போலே இருக்கை’
என்பதாம்.
2. ஸ்ரீராமா. அயோத். 99 :
25.
3. ஸ்ரீராமா. கிஷ்கிந். 19
: 25.
பரத்துவ நிர்ணயம் செய்யும்
இத்திருவாய்மொழியில் ‘கிடந்திருந்து நின்று’ என்று
ஸ்ரீராமபிரானேபரம்பொருள்’ என்பதற்கு.
‘ஆயின், பிரமாணம் உண்டோ?’ என்னும்
வினாவிற்கு விடையாக, ‘அவர்களுடைய பெண்கள் பக்கலிலே
கேட்குமித்தனையே
அன்றோ இவனுடைய பரத்துவம்?’ என்று அருளிச்செய்து, அதற்கு
ஸ்ரீராமாயணத்தினின்றும்
மேற்கோட்சுலோகங்கள் இரண்டு காட்டுகிறார். ‘அவர்கள்’
என்றது, இராவணன் வாலி என்னும்
இருவரை.
4. ஸ்ரீராமா. யுத். 114 :
15. இது மண்டோதரியின் கூற்று.
|