எப
|
எட்டாந்திருவாய்மொழி - பா. 7 |
227 |
எப்பொழுதும் உள்ளவர்’
என்னுதல்; 1‘தேவரீர் வேதங்களாலும் அளவிட முடியாதவர்; அணுக முடியாதவர்; இந்திரியங்களை வென்றவர்;
உயர்ந்த தார்மிகர்; அழிவற்ற கீர்த்தியினை உடையவர்; பூதேவி போன்ற பொறுமை உடையவர்;
இரத்தம் போன்ற திருக்கண்களையுடையவர்’ என்னுதல் சொல்லாநிற்பர்கள் அன்றே?
அளந்து - தன்னதான
பூமியை மஹாபலி போல்வார் இறாஞ்சிக் கொள்ள, அதனை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு. கேழலாய்க்
கீழ்ப்புக்கு இடந்திடும் - 2நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வராக வேடத்தை மேற்கொண்டு,
பிரளய வெள்ளத்துக்குள்ளே முழுகி அண்டபித்தியிலே சேர்ந்த பூமியைப் பிரித்து எடுக்கும். தன்னுள்
கரக்கும் - ‘காத்தல்’ என்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு கொம்பிலும் குளம்பிலும் கொள்ளாமல்
வயிற்றிலே தைத்துக் காத்தபடி. இனி, ‘மேல் ஒருகாலம் பிரளயம் வரும்’ என்று 3ஏலக்
கோலிப்பிரளயம் வந்தாலும் ‘இங்கு உண்டோ?’ என்று இளைத்துக் காட்டலாம்படி முன்புத்தையது ஒன்றும்
தெரியாதபடி வைக்கும் எனலுமாம். உமிழும் - ‘இவை என்பட்டன’ என்று பார்க்கைக்காகப் பின்னை
வெளி நாடு காண உமிழும். தடம் பெருந்தோள் ஆரத்தழுவும் - மிகப்பணைத்த திருத்தோள்களாலே
ஆரும்படியாகத் தழுவும். பார் என்னும் மடந்தையை - ஸ்ரீ பூமிபிராட்டியை; பூமியைப் பிரகாரமாகவுடையள்
ஆகையாலே அதற்குரிய ‘பார்’ என்ற சொல்லால்
_____________________________________________________________
1. ஸ்ரீராமா. கிஷ்கிந். 24 :
31. இது தாரையின் கூற்று.
2. ‘செய்குறி ஈட்டம் கழிப்பிய
வழிமுறை
கேழல் திகழ்வரக் கோலமொடு
பெயரிய
ஊழி ஒருவினை உணர்த்தலின்
முதுமைக்கு
ஊழி யாவரும் உணரா
ஆழி முதல்வ!நின் பேணுதும்
தொழுது.’
(பரி. 2 : 15 -19)
என்னும் பரிபாடற்பகுதியும்,
‘காலவீட்டம் கழிந்த பின் உயிர்கள் உளவாதற்பொருட்டு
அந்நிலத்தினை எடுத்திட்ட கேழல் கோலத்தால்,
திகழ்வரப் பெயர் பெற்ற இவ்வராக
கற்பம் நின் செயல்களுள் ஒரு செயலின் பெயராமதனை உணர்த்துதலின்,
அச்செயல்கள்
பலவற்றையும் செய்கின்ற நின் முதுமைக்குள்ள கற்பங்கள் யாவரானும் அறியப்படாத’
என்ற அதன் உரையும் ஈண்டு நினைத்தல் தகும்.
3. ஏலக்கோலுதல் - முன்னரே
விசாரித்தல். இளைத்துக் காட்டல். குழைத்துக்காட்டல்.
ஆரும்படி - பூர்ணமாகும்படி.
|