பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

234

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

    பொ-ரை : சிவந்த கண்களையும் கரிய திருமேனியையுமுடைய இறைவனை, வண்டுகள் அலைகின்ற சோலைகளையுடைய திருவழுதிவள நாட்டையுடைய ஆழ்வார் தலையான பண்களிலே வைத்துப் பாடிய ஆயிரம் தமிழ்ப்பாசுரங்களிலே இப்பத்துப் பாசுரங்களையும் வல்லர்கள், பரமாகாசத்தில் சிறப்போடு இருந்து எனக்கும் என் சம்பத்திகளுக்கும் தருவதாக இருக்கிற அந்தமில் இன்பத்து அழிவில் வீட்டிலே இன்பத்தினை அனுபவிப்பார்கள்.

    வி-கு : அலம்புதல் - ஒலித்தலுமாம். ‘வீற்றிருந்து எம் மா வீடு ஆள்வர்’ என மாற்றுக. ‘வீற்றிருத்தல் - வேறு ஒன்றற்கு இல்லாத சிறப்போடு தங்கியிருத்தல்’ என்பர் நச்சினார்க்கினியர்.

    ஈடு : முடிவில், 1இத்திருவாய்மொழியைக் கற்கவல்லவர்கள் இத்திருவாய்மொழியிற்சொன்ன முத்தப் பிராப்பிய போகத்தைப் பெறுவர் என்கிறார்.

    கண் தலங்கள் செய்ய கருமேனி அம்மானை - 2‘பூதலங்கள்’ என்னுமாறு போலே திருக்கண்களின் பரப்பைச் சொல்லுகிறது. பரந்து சிவந்திருந்துள்ள திருக்கண்களையும், அவற்றுக்குப் 3பரபாக மாம்படி கருமை நிறைந்த திருமேனியையுமுடைய சர்வேஸ்வரனை. வண்டு அலம்பும் சோலை வழுதி வளநாடன் பண் தலையில் சொன்ன தமிழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லார் - வெள்ளத்திலே அலைவாரைப் போலே, தேன் வெள்ளத்திலே வண்டு அலையாநின்றுள்ள சோலையையுடைய திருவழுதி வளநாட்டையுடைய ஆழ்வார் தலையான பண்ணிலே சொன்ன தமிழ் ஆயிற்று இப்பிரபந்தந்தான்; இதன் பாசுரங்கள் ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தையும் கற்க வல்லவர்கள். பண் தலையிற் சொன்ன - பண்ணின் மேலே சொன்ன என்று பொருள் கூறலுமாம். விண் தலையில் வீற்றிருந்து எம் மா வீடு ஆள்வர் - பரமபதத்திலே தங்கள் வேறுபாடு தோன்ற இருந்து எவ்வகையாலும் விலக்ஷணமான மோக்ஷமானது தங்களுக்கு

_____________________________________________________________

1. ‘விண்தலையில் வீற்றிருந்து ஆள்வர் எம் மா வீடே’ என்றதனைக் கடாட்சித்து
  அவதாரிகை அருளிச்செய்கிறார்.

2 ‘கண்’ என்னாது, ‘கண் தலங்கள்’ என்றது, திருக்கண்களின் பரப்பைச் சொல்லுதற்கு
  என்று திருவுள்ளம் பற்றி, அதற்கு மேற்கோள் காட்டுகிறார். ‘பூதலங்கள்’ என்று.
  ‘அரங்கத்து அமலன் முகத்து, கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட
  அப்பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே’ என்றார் பாண் பெருமாள்.
 

3. பரபாகம் -வண்ணப்பொயிவு; வர்ண உத்கர்ஷம்.