உர
எட்டாந்திருவாய்மொழி - பா. 11 |
235 |
உரிமையாம்படி பெறுவர்.
விண்தலை - தலையான விண்ணிலே என்னுதல்; விண்ணின்மேலே என்னுதல். அங்குள்ளார் தங்கள்
ஆணையைப் பின் பற்றும்படியாகப் பெறுவர் என்றபடி. ஆத்தும இலாபத்து அளவே அன்றி, பரம்புருஷார்த்த
இலட்சண மோட்சத்தை ஆளப் பெறுவராதலின், ‘எம் மா வீடு ஆள்வர்’ என்கிறார். தொடர்ந்து
வருகிற பிறவிகளாய் உண்டான துன்பங்கள் எல்லாம் தீரும்படி வீறுபட்டு இருப்பராதலின்,
‘வீற்றிருந்து’ என்கிறார். இனி, ‘எம் மா வீடு ஆள்வர்’ என்பதற்கு, 1‘தன்பால்
மனம் வைக்கத் திருத்தி வீடு திருத்துவான்’ என்கிறபடியே, 2‘எனக்கும் என் சம்பந்திகட்கும்
தருவானாகச் சமைத்து நிற்கிற பரமபதத்தை ஆளப் பெறுவர்’ எனலுமாம்.
(11)
முதற்பாட்டில், இத்திருவாய்மொழியில்
பரக்கச் சொல்லுகிற அர்த்தத்தைச் சுருங்க அருளிச்செய்யாநின்றுகொண்டு, ‘சம்சாரமாகிற இக்கடலைக்
கடக்க வேண்டும்’ என்று இருப்பார்க்குக் கடத்திக் கொடுக்கும் என்றார்; இரண்டாம் பாட்டில்,
‘அவன் வேண்டுமோ? அவனுடைய சம்பந்தமே கடத்தும்’ என்றார்; மூன்றாம் பாட்டில், ‘அவனுடைய அதிமாநுஷ
சேஷ்டிதங்கள் எங்கும் காணலாம்’ என்றார்; நான்காம் பாட்டில், ‘அந்தம் இல் பேரின்பத்தைப்
பெறவேண்டும் என்றிருப்பீர்! அவனைப் பற்றுங்கோள்’ என்றார்; ஐந்தாம் பாட்டில், மேல்
‘இணைவன் ஆம் எப்பொருட்கும்’ என்றதனை விவரித்தார்; ஆறாம் பாட்டில், ‘இவ்வுயர்வுகள் எல்லாம்
அவனுக்கு உண்டோ?’ என்ன, ‘நாம் ஆராய வேண்டாதபடி அருச்சுனன் பண்டே தெரிந்து அறுதியிட்டான்’
என்றார்; எழாம் பாட்டில், ‘ஒருவன் 3அநுவர்த்தனம் கொண்டு அறிய வேண்டுமோ? அவன்
விரும்பிச் செய்கிற எல்லாக் காரியங்கட்கும் உரியதாக அன்றோ இவ்வுலகம் இருக்கிறது?’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘எங்கும் பரந்திருத்தல் தொடக்கமான அவனுடைய செயல்கள் ஒருவரால் அளவிட
முடியாது’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘அவனுடைய எங்கும் பரந்திருக்கும் தன்மையை இசையாதார்
இரணியன் பட்டது
____________________________________________________________
1. திருவாய்மொழி, 1. 5 :
10.
2. இங்கு ‘எம்’ என்பதற்கு
‘எங்கள்’ என்பது பொருள்; இந்தப் பொருளையே ‘எனக்கும்
என் சம்பந்திகட்கும்’ என்று விரித்து
அருளிச் செய்கிறார். முன்னைய பொருளுக்கு ‘எ,
மா, வீடு’ எனப் பிரிக்க.
3. அநுவர்த்தனம் - ஒழுகுதல்.
|