ப
236 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
படுவர்’ என்றார்; பத்தாம்
பாட்டில், ‘இந்த விதமானவனை நான் கண்டு அனுபவிக்கப் பெற்றேன்’ என்றார்; முடிவில், இது கற்றார்க்குப்
பலம் சொல்லித் தலைக்காட்டினார்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
அணைந்தவர்கள் தம்முடனே
ஆயன்அருட்கு ஆளாம்
குணந்தனையே கொண்டுஉலகைக்
கூட்ட - இணங்கிமிக
மாசில்உப தேசம்செய்
மாறன் மலர்அடியே
வீசு புகழ்எம்மா
வீடு.
(18)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|