தக
242 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
தக்கவனாம்படி இருக்கை
அன்றோ? உம்முடைய சாயையை ‘நில்’ என்று சொல்லிற்றிலீரே; சாயையைப் போன்று உம்மைப் பின்
செல்வேனாக வேண்டும்’ என்பார், ‘அநுசரம் - பின் தொடர்ந்து வருகிறேன்’ என்கிறார். இதனால்,
பண்ணும் பிரகாரத்தை விதித்தபடி. மேலும், 1‘நீரும்நிழலும் வாய்த்திருப்பது ஒரு பிரதேசத்தைப்
பார்த்துப் பர்ணசாலையைச் சமையும்’ என்ன, ‘நம் தலையிலே ஸ்வாதந்திரியத்தை வைத்த போதே
பெருமாள் நம்மைக் கைவிட்டார்’ என்று வேறுபட்டார். ‘ஏவம் உக்தஸ்து ராமேண-‘இதற்கு முன்னர்
எல்லாம் நம் குறையாலே இழந்தோம் என்று இருந்தோம்; இன்று இவர்தாமே நம் சொரூபம் அழியக்
காரியம் பார்த்தார்; இனி நம் சொரூபம் என்று ஒன்று உண்டோ?’ என்று வேறுபட்டார்; லக்ஷ்மண :-
பாரதந்திரியத்தை நிரூபகமாக உடையவர். ஸம்யதாஞ்ஜலி: - 2நாம் நம் சொரூபத்தை
அழித்துக் கொண்ட அன்று நோக்குகை அன்றிக்கே, தலைவன் தானே அழித்த அன்றும் சொரூபத்தைத்
தரவற்றாயிற்று அஞ்சலி. ஸீதா ஸமக்ஷம் - பண்ணின அஞ்சலிக்கு 3அந்யபரதை பாவிக்க
ஒண்ணாதவள் - சந்நிதியிலே. காகுத்ஸ்தம - பிராட்டி சந்நிதியும் மிகையாம்படியான குடியிற்பிறப்பை
உடையவரை. இதம் வசனம் அப்ரவீத் - இவ்வார்த்தையைச் சொல்லுவானே!’ என்று கொண்டாடுகிறான்
இருடி. மேலும், 4‘பரவா நஸ்மி - உம்முடைய அஸ்மிதை போல அல்ல
_____________________________________________________________
1. கீழே வருகின்ற ‘ஏவம்
உக்தஸ்து’ என்ற சுலோகத்துக்கு அவதாரிகை ‘நீரும் நிழலும்’
என்ற வாக்கியம். இந்தச் சுலோகம்,
ஸ்ரீராமா. ஆரண். 15 : 6.
2. ‘வேறுபட்ட பின் அஞ்சலி
பண்ணுவான் என்?’ என்னும் வினாவிற்கு விடையாக ‘நாம்
நம் சொரூபத்தை’ என்று தொடங்கி
அருளிச் செய்கிறார்.
3. ‘அந்யபரதை பாவிக்க
ஒண்ணாதவன்’ என்றது, ‘வேறு ஒன்றிலே நோக்குள்ளவனாக
இறைவன் இருத்தற்கு விடாதவள்’ என்றபடி.
4. ஸ்ரீராமா. ஆரண். 15 :
7. பரவாநஸ்மி - பரதந்திரனாக இருக்கிறேன். நான் பரதந்திரனாக
இருக்கிறேன் என்றதனால்
நீர் ஸ்வதந்திரராக இருக்கின்றீர் என்பது போதருதலின்,
அதனையே, ‘உம்முடைய அஸ்மிதை போல
அல்லகாணும் என்னுடைய அஸ்மிதை’
என்று அருளிச் செய்கிறார். அஸ்மி - ஆகிறேன்; ஆகிறேன் ஆகுந்தன்மை
- அஸ்மிதை.
|