அபகர
ஒன்பதாந்திருவாய்மொழி
- முன்னுரை |
241 |
அபகரித்து, அவரைப்
பிரிந்த அந்தக் கணத்திலே முடிந்தவன் வயிற்றிலே பிறந்தேனாம்படி எங்ஙனே நான்?’ என்பது
ஸ்ரீபரதாழ்வான் திருவார்த்தை.
ஸ்ரீராமபிரான்
‘நில்’ என்ன, 1‘குருஷ்வ - செய்தருள வேண்டும்’ என்றார் இளையபெருமாள்;
2‘சேர்ந்திருப்பதனாலேயே தரிக்கக்கூடிய பொருளைப் பிரித்து நிற்கச்
சொல்லுகையாகிறது அழிக்கையே அன்றோ?’ என்கிறார். ‘யாருடைய பிரயோஜனத்திற்கு யார்தான்
இருக்கிறார்? உம்முடைய இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்பார், 3‘குரு’ என்னாதே,
‘குருஷ்வ’ என்றார். 4‘நீர்தாம் ‘நில்’ என்று அருளிச்செய்தது, ‘நான், நிற்கச்
சொல்லுகைக்குத்
_____________________________________________________________
1. பெருமாள்
‘நில்’ என்ன, இளையபெருமாள், குருஷ்வ மாம் அநுசரம் - நான் பின்
தொடர்ந்து வருவேனாகச் செய்ய
வேண்டும்’ என்று சொன்னார் என்றபடி.
2. ’நீருள எனின்உள்
மீனும் நீலமும்;
பாருள எனின்உள
யாவும்; பார்ப்புறின்
நாருள தனுவுளாய்!
நானும் சீதையும்
யாருளர் எனின்உளேம்?
அருளுவாய்’ என்றான்.
(கம்ப. நகர் நீங். 157)
என்ற செய்யுளைச் ‘சேர்ந்திருப்பதனாலேயே
தரிக்கக்கூடிய’ என்று தொடங்கும்
வாக்கியத்தோடு ஒப்பு நோக்குக.
3. ஒருவன் ஒரு தொழிலைச்
செய்தால், அத்தொழிலால் உண்டாகும் பயன் தன்னைச்
சார்வதாக இருந்தால், அத்தொழிலை உணர்த்துகின்ற
சொல்லின் உறுப்பை ‘ஆத்மநே
பதம்’ என்றும், பயன் பிறன் ஒருவனைச் சார்வதாக இருந்தால்
அத்தொழிலை
உணர்த்தும் சொல்லின் உறுப்பைப் ‘பரஸ்மை பதம்’ என்றும், கூறுப. அங்குக்
‘குரு’
என்பது பரஸ்மை பதம்;’ ‘குருஷ்வ’ என்பது ஆத்மநே பதம். ஆத்மநே
பதமான
‘குருஷ்வ’ என்றதனை நோக்கி, ‘யாருடைய பிரயோஜனத்துக்காக யார் தான் இருக்கிறார்?
உம்முடைய
இழவுக்கு நீர் பதறாதிருக்கிறது என்?’ என்று அருளிச்செய்கிறார். ‘சேதனன்
அடிமை செய்வதால்
உளதாய பயன் இறைவனுக்கு’ என்னும் சாஸ்திரப் பொருளை இங்கு
நினைவு கூர்க. இங்கு, ‘உனக்கேநா மாட்செய்வோம்;
மற்றைநம் காமங்கள் மாற்று’ என்று
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார் திருவாக்கின் சீரிய
பொருளைச் சிந்தை செய்க.
4. ‘அநுசரம் -
பின் தொடர்ந்து வருகிறேன்’ என்றதற்கு பாவம் ‘நீர்தாம்’ என்று
தொடங்கும் வாக்கியம். அந்தச்
சுலோகத்தை முற்றும் ஈண்டுத் தருகிறேன்: -
‘குருஷ்வ மாம் அநுசரம் வைதர்ம்யம் நேஹ வித்யதே
கிருதார்த் தோஹம்
பவிஷ்யாமி தவசார்த்த! ப்ரகல்பதே.’
‘சேஷபூதனான என்னைப்
பின்னே சஞ்சரிக்கின்றவனாகச் செய்தருள வேண்டும்
என்னைக் கூட்டிக்கொண்டு போவதில் சேவ்ய சேவக
பாவம் மாறாடிக் கிடக்க இல்லை;
தேவரீருக்கே பயன் சித்திக்கிறது; நான் தேவரீருக்குக் கைங்கர்யத்தைச்
செய்து அத்தால்
வந்த கைங்கர்ய பலத்தை அடைந்தவனாகப் போகிறேன்’ என்பதாம்.
|