க
240 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
காணுதல் செய்யுமித்தனை.
கைகேயி 1‘ராஜந்’ என்ற சொல் பொறுக்கமாட்டாமல் இராஜசபையிலே கூப்பிட்டான்
அன்றோ? 2‘விலலாப சபா மத்யே - ஒரு திரளாய் இருந்து என்னுடைய சேஷத்துவத்தைக்
கொள்ளை கொள்வதே! திருடர்களாலே திருடப்பட்டவன் போன்று வாய்விட்டு இரைந்து அழுதற்குத் தகும்’
என்கிறபடியே, இழந்த பொருளுக்குத் தக்கபடியாக இருக்கும் அன்றோ கூப்பீடும்? ஜகர்ஹேச - சந்தியாவந்தனத்திற்குப்
பிற்பாடரைச் 3சிஷ்டகர்ஹை பண்ணுவாரைப் போலே பழித்தான். புரோஹிதம் - அழகியதாக
இக்குடிக்கு முன்னோடி இதம் பார்த்தாய். சபா மத்யே புரோஹிதம் ஜகர்ஹே - சபையின் மத்தியிலே
புரோஹிதராகிய வசிஷ்டரை நிந்தித்தான்; 4‘ஆசாரியன் விதிகளை மீறுவானேயாயின்
அதனை அவனிடத்தில் ஏகாந்தத்தில் கூறல் வேண்டும்’ என்கிற நிலையையும் பார்த்திலன். ராஜ்யஞ்ச
அஹஞ்ச ராமஸ்ய - ஒருவனுக்கு இரண்டு பொருள்கள் அடிமை ஆனால் ஒன்றை ஒன்று நிர்வஹிக்குமோ? அப்படியாயின்,
ராஜ்யந்தான் என்னை ஆண்டாலோ? தர்மம் வக்தும் இஹார்ஹஸி -‘பெருமாள் காடு ஏறப்போனார்; சக்கரவர்த்தி
துஞ்சினான்; நாடு அரசன் இன்றி இருத்தல் ஆகாது; நின்றாரில் பிரதானர் தலையிலே முடியை வைக்கவேண்டும்’
என்று பார்த்தாய் இத்தனை போக்கி, இதற்கு விஷயமாக இருக்கிற என்னைப் பார்த்து வார்த்தை
சொல்லிற்றில்லை. கதம் தசரதாத் ஜாதோபவேத் ராஜ்ய அபஹாரக: - 5அவர் போகட்டுப்
போன ராஜ்யத்தை
_____________________________________________________________
1. இப்பாசுரத்திற்கு
அநுஷ்டானம் காட்டுகிறார், ‘கைகேயி’ என்று தொடங்கி. ‘ராஜந்’
என்பது, ஸ்ரீராமா. அயோத். 72
: 24.
2. ஸ்ரீராமா. அயோத்.
82 : 10, 11. இச்சுலோகங்களினுடைய பிண்டப் பொருள் வருமாறு:
‘அன்னத்தின் குரல் போன்று குரலையுடைய
யுவாவாகிய அந்தப் பரதாழ்வான், கண்ணீர்
அடைப்பினால் தெளிவில்லாத வார்த்தைகளால் சபை மத்தியில்
கதறினான்;
புரோகிதனான வசிஷ்டனையும் குறை கூறினான்; இராஜ்யமும் நானும் இராம்பிரானுடைய
சொத்து;
இந்த விஷயத்தில் தர்மத்தைச் சொல்லக்கடவீர்; தசரதரிடமிருந்து பிறந்தவன்
ராஜ்யத்தை
அபஹரித்துக்கொள்ளுகின்றவனாக எப்படி ஆகக்கூடும்?’ என்பது.
3. சிஷ்ட கர்ஹை பண்ணுதல்
- ‘சிஷ்டர்களுக்கு இது தகாதுகாண்’ என்று பழித்தல். சிஷ்டர்
- பெரியோர்.
4. ஆபஸ்தம்ப சூத்திரம்.
5. ‘ஒரு திரளாய் இருந்து’
என்றது முதல் ‘வார்த்தை சொல்லிற்றில்லை’ என்றது முடிய,
சொருபத்திற்குச் சேராது என்றார்.
இனி, குடிபிறப்புக்கும் சேராது என்கிறார், ‘அவர்
போகட்டுப்போன’ என்று தொடங்கி.
‘தள்ளரிய பெருநீதித் தனியாறு
புகமண்டும்
பள்ளம்எனும் தகையானைப்
பரதன்எனும் பெயரானை’
என்ற கம்பநாட்டடிகள் திருவாக்கு
ஈண்டு நினைவு கூர்க.
|