பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1ப

ஒன்பதாந்திருவாய்மொழி - முன்னுரை

239

1பின் வாக்கியத்திலும் இவ்வர்த்தத்தைச் சொல்லாநின்றதே என்க ‘துவயந்தன்னில் அறுதியிட வேண்டுகிறது என்?’ என்னில், முன் வாக்கியத்தால் சொன்ன சாதனம், எல்லாப்பலன்களையும் கொடுக்கக் கூடியது ஆகையாலே, வேறு பலன்களை விரும்பி அடைக்கலம் புகுவார்க்கும் அவற்றைக் கொடுத்துவிடுவான் ஒருவன் அன்றோ சர்வேஸ்வரன்? ஆதலால், அறுதி இடுகிறது என்க

    ‘நன்று; இத்திருவாய்மொழியில் அறுதியிடும் பேறு என்?’ என்னில், 2‘முத்தனாய்த் தனக்கு மேல் ஒன்று இல்லாததான சுகானுபவத்தைப் பண்ணவுமாம்; ஆத்மப்பிராப்தியைப் பெறவுமாம்; ஆத்துமவிநாசமே ஆகவுமாம்; நரக அனுபவம் பண்ணவுமாம்; இவற்றில், எனக்கு ஒரு நிர்ப்பந்தம் இல்லை; உனக்காக வரும் அன்று இவை இத்தனையும் வரவுமாம்; எனக்காக வருமன்று இவை இத்தனையும் வேண்டா; ஆன பின்னர், தேவர்க்கு உறுப்பாமிதுவே எனக்கு வடிவாம்படி பண்ணியருள வேண்டும்’ என்று, தம்முடைய பேற்றினை அறுதியிடுகிறார்.

    இப்படிப்பட்ட செயல்தான் உலகத்தில் நடைபெறுவது ஒன்று அன்று; இவ்வாழ்வார் பக்கலிலே காணுதல்; இராமாயண புருஷர்களில் ஸ்ரீபரதாழ்வான், இளையபெருமாள் இவர்கள் பக்கலிலே

_____________________________________________________________

1. பேற்றினைப் பெறும் சமயத்தில் அனுபவம் இருக்கும்படியையும் பிரார்த்தித்துப்
  பெறவேண்டும் என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பின் வாக்கியத்திலும்’ என்று
  தொடங்கி. ‘பின் வாக்கியம்’ என்றது, ‘ஸ்ரீமதே நாராயணாய நம:’ என்றதனை. இந்த
  வாக்கியத்தில் ‘நம:’ பதத்தாலே ‘உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று பேறு
  அறுதியிடப்பட்டிருத்தல் காண்க. இந்த வாக்கியம், திருமகள் கேள்வனாய்ச் சர்வ
  ஸ்வாமியாய் இருக்கிற சர்வேஸ்வரன் திருவடிகளில் செய்யும் கைங்கர்யமாகிற பேற்றினைச்
  சொல்லுகிறது. ‘துவயந்தன்னில்’ என்றது, முமுக்ஷூவினுடைய சாதன விசேஷத்தைச்
  சொல்லுகிற துவயத்திலே என்றபடி. ‘முன் வாக்கியம்’ என்றது, ‘ஸ்ரீமந்நாராயண சரணௌ
  சரணம் பிரபத்யே’ என்றதனை. இதிற்சொன்ன சாதனமாவது, ‘பெரிய பிராட்டியாரைப்
  புருஷகாரமாக முன்னிட்டுச் சர்வேஸ்வரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறேன்’
  என்பதாம். இதிற்சொன்ன சாதனம் புதிதாகப் பெறும் செல்வம், இழந்த செல்வம்,
  கைவல்யம், இறைவன் திருவடிகளிற்செய்யப்பட்டும் கைங்கரியம் என்னும் நான்கற்கும்
  பொதுவாய் இருத்தல் காண்க.

2. ‘சிறப்பில் வீடு’ என்ற பாசுரத்தை நோக்கி, ‘முத்தனாய்’ என்கிறார்.’ சிறப்பில் வீடு’ என்று
  விசேடித்ததனாலே, கேவலம் வீடும் உண்டு என்று கொண்டு ‘ஆத்துமப் பிராப்தியைப்
  பெறவுமாம்’ என்கிறார். ஆத்துமப் பிராப்தி -கைவல்யம். ‘எய்தற்க’ என்றதனைக்
  கடாட்சித்து, ‘ஆத்தும விநாசமே ஆகவுமாம்’ என்கிறார்.