நம
238 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
நம்முடைய பேற்றினை அறுதி
இடுவோம்’ என்று பார்த்து, 1‘நீ இங்ஙனே நில்’ என்று அவனை நிறுத்தி வைத்துப் பேற்றினை
அறுதியிடுகிறார்.
2எம்பார்,
இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால், இருந்தவர்களை ‘யார்?’ என்று கேட்டுக்
கதவுகளையும் அடைப்பித்து, மிக இரகசியமாக அருளிச்செய்வர்.
‘நன்று; 3பெறத்
தகுந்த பேறு என்பது இப்படி அன்றோ இருப்பது? இவர் அறுதியிட வேண்டுகிறது என்?’ என்னில், சர்வேஸ்வரன்
இவ்வாத்துமாவுக்குத் தலைவனாய், இவனும் அடியவனாய், அவனுடைய உபாய பாவமும் நித்தியமாக இருக்கச்
செய்தே அன்றோ இவனுக்கு இன்று 4ஸ்வீகாரம் வேண்டுகிறது? அப்படியே, அவன் ஸ்வதந்தரன்
ஆகையாலே, 5நினைத்தபோது நினைத்தபடி கொள்வான் ஒருவன் ஆகையாலே, பேற்றினைப் பெறும்
சமயத்தில் அனுபவம் இருக்கும்படியையும் அறுதியிட்டுப் பெறவேண்டும் என்க.
____________________________________________________________
1. ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் இஃதே’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றி, ‘நீ இங்ஙனே
நில்’ என்று அவனை நிறுத்தி வைத்து’ என்கிறார். தன் குணங்களை அனுபவிக்கிற
ஈஸ்வரனை விலக்கித் தாமும் பகவத்குணானுபவத்தினின்றும் விலகினவராய் என்றபடி
அப்பாசுரத்தின்
வியாக்கியானத்தை நோக்குக.
2. இது குஹ்ய தமம்’
என்பதற்கு ஐதிஹ்யம், ‘என்பார்’ என்று தொடங்கும் வாக்கியம்.
குஹ்யம் - இரகசியம். தமம் -
உயர்ந்தது.
3. ‘பெறத்தகுந்த பேறு
என்பது இப்படியன்றோ இருப்பது?’ என்று தொடங்கும்
வாக்கியத்திற்குக் கருத்து, ‘நம: பதத்தாலே
சொல்லப்படுகின்ற பாரதந்திரித்திற்கு
அநுகுணமாகச் சந்தனம் மலர் முதலியவைகளைப் போலே,
அவனே தன் பேறாக
விநியோகம் கொள்ளுமதாயன்றோ இருப்பது? இப்போது இவர் அறுதியிட வேண்டிய
அமிசம்
என்ன இருக்கின்றது?’ என்பதாம்..
4. ‘ஸ்வீகாரம் வேண்டுகிறது’
என்றது, ‘கர்வமுத்திப் பிரசங்க பரிகாரத்தின்பொருட்டு
ஸ்வீகாரம் வேண்டுகிறது’ என்றபடி. ஸ்வீகாரம்
- இறைவனைப் பற்றி அவனிடத்துப்
பேற்றினை வேண்டுதல்.
5. ‘நினைத்த போது நினைத்தபடி
கொள்வான் ஒருவன்’ என்றது, ‘ஐஸ்வர்யம்
முதலியவற்றையாதல், கைங்காரியத்தைத் தன்பொருட்டுச்
செய்துகொள்ளுப்படியாதல்
கொடுத்து விநியோகம் கொள்வான் ஒருவன்’ என்றபடி.
|